ஏக நட்சத்திர, ராசி திருமணம் நல்லதா?

305

திருமணம் செய்வதற்கு முன் ஆண் பெண் இருவருக்கும் பொருத்தம் பார்க்கின்ற போது நட்சத்திர பொருத்தம் சிறப்பாக இருந்தால் திருமண வாழ்க்கையானது மிக சிறப்பாக இருக்கும். சில நேரங்களில் ஆண், பெண் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக அமைந்துவிடும்.

ஏக நட்சத்திரத்திற்கு திருமணம் செய்யலாமா என்ற சந்தேகம் மக்களுக்கு உண்டு. என்றாலும் சில நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரமாக இருந்தாலும் திருமணம் செய்யலாம். அதற்கு சில விதி முறைகள் உண்டு.


ஆண் பெண் இருவரும் ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், விசாகம், அஸ்தம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி, ஆகிய நட்சத்திரங்களாக இருந்தால் திருமண செய்ய மிகவும் உத்தமம்.


அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம், ஆகிய நட்சத்திரங்களாக இருந்தால் திருமணம் செய்ய மத்திமம். மேற்கூறிய நட்சத்திரங்களை தவிர மற்ற நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் திருமணம் செய்ய கூடாது.


ஏக நட்சத்திரம் என பார்க்கும் போதும் ஆண், நட்சத்திரம், முன் பாதமாகவும் பெண் நட்சத்திரம் பின் பாதமாக வந்தால் சிறப்பான அமைப்பாகும். ஆண் நட்சத்திரம் முன் பாதம் பெண் நட்சத்திரம் பின் பாதமாக இருப்பதன் மூலம் நட்சத்திர பொருத்தம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும்.
ஏக நட்சத்திர ரீதியாக இருவருக்கும் நட்சத்திர பொருத்தம் இருந்தாலும் செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம் இருக்கிறதா ஜாதகப் பொருத்தம் சிறப்பாக இருக்கிறதா என ஆராய்ந்து அனைத்தும் நன்றாக இருந்தால் மட்டுமே திருமணம் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here