கடகம் – குருபெயர்ச்சி பலன்கள்

878

புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

உயர்ந்த நோக்கங்களுடன் பிறர்

மெச்சும்படியான காரியங்களைச் செய்யக் கூடிய ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான பொன்னவன் என போற்றப்படும்

குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 20-11

2027 முதல் 13-04-20022 வரை (வாக்கியப்படி

13-11-2021 முதல் 13-04-2022 வரை) உங்கள்

ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில்

சஞ்சாரம் செய்யவுள்ளார். இது அவ்வளவு

சாதகமான அமைப்பு என்று கூற முடியாது.

இதனால் உங்களது பொருளாதார நிலை

ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்கள்

ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சரப்ப

கிரகமான ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத

உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள்

அனைத்தும் பூர்த்தியாகும் போகம் உண்டு

என்றாலும் எதிலும் சிக்கனத்துடன்

இருப்பது. ஆடம்பர செலவுகளை குறைத்து

கொள்வது நல்லது.

ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும்

கிரகமான சனி பசுவான் தற்போது உங்கள்

ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல்

சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு

என்பதால் உங்களது ஆரோக்கியம் நன்றாக

இருக்கும் என்றாலும் 5-ல் கேது

சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று

கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. கணவன்,

மனைவியிடையே சிறுசிறு கருத்து

வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை

குறையாது உற்றார் உறவினர்களை

அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.

குரு உங்கள் ராசிக்கு 2, 4,12-ஆம் வீடுகளை

பார்வை செய்வதால் நெருங்கியவர்களால்

ஒரு சில அனுகூலம், வீடு, வாகனம்

போன்றவற்றை புதுப்பிக்கக் கூடிய

சூழ்நிலை உண்டாகும். திருமண சுப

காரியங்களுக்கான முயற்சிகளில் சிறு சிறு

தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும்.

தடைகளுக்கும்.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு

லாபங்கள் சுமாராக இருக்கும். புதிய

ஒப்பந்தங்களில் கையொழுத்திடும் போது

கவனம் தேவை கூட்டாளிகளை

கலந்தாலோசித்து செயல்பட்டால் தொழில்,

வியாபாரத்தில் எதையும் சமாளித்து

வலமான பலனை அடைய முடியும் பணம்

கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் நம்பிவயவர்களே நெருக்கடிகளை -ஏற்படுத்துவார்கள் என்பதால் அதிக

முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று

எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது

உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல

வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும்

வேலைப்பளு சற்று அதிகப்படியாக

இருக்கும், பெறுப்புகள் அதிகரிக்கும், சில நேரங்களில் மற்றவர்கள் வேலையையும் நீங்கள் எடுத்து செய்ய நேரிடும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் சூழ்நிலை அதன் மூலம்

தேவையற்ற அலைச்சல் ஏற்படும்,

உடல் ஆரோக்கியம்

உங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை

எடுத்து கொள்வது நல்லது

உடல்நிலையில் வயிறு சம்பந்தப்பட்ட

பாதிப்புகள். அஜீரணக் கோளாறுகள்

உண்டாகும். குடும்பத்தில் மருத்துவச்

செல்வுகள் அதிகரிக்கும் தேவையற்ற

பயணங்களைத் தவிர்த்தால்

அலைச்சல்கள் சற்றே குறையும் உணாவு

விஷயத்தில் கவனம் தேவை.

குடும்பம் பொருளாதார நிலை

குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து

நடந்து கொண்டால் ஒற்றுமை சிறப்பாக

அமையும். பணவரவுகளில் நெருக்கடிகள்

நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள்

இருக்கும். முடிந்த வரை ஆடம்பரச்

செலவுகள் செய்வது, மற்றவர்களிடம் கடன்

வாங்குவது போன்றவற்றை தவிர்ப்பது

நல்லது உற்றார் உறவினர்கள் ஏற்படுத்தும்

பிரச்சனைகள் உங்களுக்கு மள

உளைச்சலை ஏற்படுத்தினாலும்

மற்றவர்களை அனுசரித்துச் செல்வது

சிறப்பு.

- Advertisement -

கொடுக்கல் வாங்கல்

பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும்

என்றாலும் ராகு 11-ல் சஞ்சரிப்பதால்

எதிர்பாராத பண வரவுகள் கிடைக்கும்

வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தின் தேவைகள்

பூர்த்தியாகும் பெரிய தொகைகளை

பிறருக்கு கடனாகக் கொடுக்கும் போது

சற்று சிந்தித்துச் செயல்படவும். அதிக

தொகைகளை முதலீடு செய்யும் போது

உங்கள் பெயரில் செய்யாமல் குடும்ப

உறுப்பினர்கள் பெயரில் செய்வது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் சற்றே மந்த

நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம்

-உண்டாகாது கூட்டாளிகள் மற்றும்

தொழிலாளர்களின் மனமறிந்து விட்டுக்

கொடுத்து நடந்து கொள்வது நல்லது. அரசு

வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில

தடைகளுக்குப் பின் கிடைக்கும் பெரிய

முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய இருக்கும்

காரியங்களில் கவனம் தேவை

உத்தியோகம்

பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத

இடமாற்றங்கள் ஏற்பட்டு அலைச்சல்கள்

உண்டாகும் நேரத்திற்கு உணவு உண்ண

முடியாத சூழ்நிலை, வயிறு சம்பந்தப்பட்ட

பாதிப்புகள் ஏற்படும் அடிக்கடிவிடுப்பு.

எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வீண்பழிகளைச் சுமக்க வேண்டிய காலம் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருப்பது நல்லது. பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம்

எடுக்க வேண்டிய காலமிது. கணவன்,

மனைவியிடையே ஒற்றுமை நிலவினாலும்

புத்திரர்களால் வீண் மன சஞ்சலங்களை

சந்திக்க நேரிடும். பணவரவுகள் ஏற்ற

இறக்கமாக இருந்தாலும் குடும்பத்

தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகி விடும்.

உற்றார் உறவினர்களை அனுசரித்து

ர்

நடந்து கொள்வது நல்லது.

பணிபுரிபவர்களுக்கு அலைச்சல்,

டென்ஷன் அதிகரிக்கும் எதிர்பார்க்கும்’

உயர்வுகள் தாமதப்படும்.

அரசியல்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக்

காப்பாற்றவதில் நிறைய சிக்கல்கள் உண்டாகும். கட்சிப் பணிகளால் வீண் விரயங்களும் அதிகரிக்கும் அடிக்கடி பயணம் மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலைகளால் உடல் நிலை பாதிப்படையும் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவிகள் சிறு தடைக்கு பின்பு கிடைக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால்

உழைப்பிற்கேற்ற பலனை பெறமுடியாமல் போகும். பூமி, மனை போன்றவற்றால் வீண் விரயங்களும் அதிகரிக்கும். வாய்க்கால், வரப்பு பிரச்சனைகளால் பங்காளிகளிடம் தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்படலாம்.

என்பதால் விட்டு கொடுத்து செல்வது

நல்லது. பயிர்களை காப்பீடு செய்வது

உத்தமம்.

மாணவ, மாணவியர் கல்வியில் மந்த நிலையும், உடல் நிலையில் சோர்வும். ஞாபகமறதியும் உண்டாகும். தேவையற்ற நட்புகளால் படிப்பில் நாட்டம் குறையும் பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவுகள் உங்களுக்கு எப்பொழுதும் குறையாமல் இருக்கும் என்ற

தைரியத்துடன் படிப்பில் நாட்டம் கொள்வது

நல்லது கூடா நட்பு கேடாய் முடியும்

என்பதை மனதில் கொள்ளவும்.

பரிகாரம்

கடகராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு

பகவான் 8

8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு

ப்ரீதியாக தட்சிணாமூர்த்திக்கு நெய்

தீபமேற்றி கொண்டை கடலை மாலை

சாற்றுவது. வியாழக்கிழமைகளில்

விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால்

அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது,

இல்லத்தில் மற்றும் தொழில் செய்யும்.

இடங்களில் குரு எந்திரம் வைத்து

வழிபடுவது நல்லது. ஏழை எளிய

மாணவர்களுக்கு உதவி செய்வது.

ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன்.

போன்றவற்றை ஏழை எளிய

பிராமணர்களுக்கு தானம் செய்வது

உத்தமம் மஞ்சள் நிற ஆடைகள் அணிவது

நல்லது

கேது 5-ல் சஞ்சரிப்பதால் கேதுவுக்கு

பரிகாரமாக தினமும் விநாயகரை

வழிபடுவது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்ராட்சர ஸ்தோத்திரம் கூறுவது, வியாழக்கிழமைகளில் விரதம் மேற்கொள்வது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, கருப்பு எள்.வண்ண மயமான

போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு

தானம் தருவது நல்லது

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1, 2:3,9.

நிறம் – வெள்ளை சிவப்பு, கிழமை – திங்கள், வியாழன், கல் – முந்து. திசை – வடகிழக்கு,

தெய்வம் – வெங்கடாசலபதி.

- Advertisement -