கணவனின் ஆயுள் நீடித்து தொழில் சிறக்க பெண்கள் செய்யும் பரிகாரம்

34

மாங்கல்யம் காக்கும் பரிகாரங்கள் சாஸ்திரத்தில் நிறையவே உண்டு. வரலட்சுமி விரதம், சாவித்ரி விரதம் இருப்பதும் மாங்கல்யம் காக்கும் பரிகாரங்களில் ஒன்றுதான். அது போல குடும்பத்தில் தேவையற்ற தொடர் பிரச்சனைகள், கெட்ட கனவுகள் வருவது போன்றவை நம் மனநிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கும். இந்த மன நிம்மதியை கொடுத்து வாழ்க்கையில் உயர செய்து மாங்கல்யத்தை பலமாக்கும் எளிய பரிகாரத்தை வீட்டில் எப்படி செய்வது? என்பதைத்தான் ஆன்மிகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம். சிலருக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வரும். இது மன சஞ்சலத்தை ஏற்படுத்தும். கணவனின் உயிருக்கு ஆபத்து இருப்பது போல கனவு வருவது, சில அமானுஷ்ய பயங்கரமான கனவுகள் வருவது, அடிக்கடி யாருக்காவது உடம்பு சரியில்லாதது போல் கனவு வருவது போன்றவை மாங்கல்ய பலத்தை குறைக்க செய்யும். இது போன்ற நேரங்களில் நம் வீட்டிலேயே எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் தீர்வு காண முடியும்.

வீட்டில் துளசி அடிக்கடி காய்ந்து போனால் அதை மாற்றி விடுங்கள். துளசி செடி காய்வது வீட்டிற்கு நல்லதல்ல. வீட்டில் துளசி மாடம் இருப்பது ரொம்பவே நல்லது. இந்த துளசி மாடத்திற்கு தினமும் பூஜை செய்து வருவது மாங்கல்ய பலத்தை நீடிக்க செய்யும். துளசி மாடத்தில் வெள்ளிக்கிழமை அன்று அம்மன் சிலை ஒன்றை நிறுவுங்கள். துளசி செடிக்கும் மற்றும் அம்மன் சிலைக்கும் மஞ்சள், குங்குமம் இட்டு மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். தீர்த்த கிண்ணத்தில் தீர்த்தம் தயாரித்து மஞ்சள் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பிரசாதம் படைக்க உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு நைவேத்திய பொருளை சிறிய வாழை இலை ஒன்றில் வையுங்கள். இப்பரிகாரத்தை காலையில் செய்வது தான் நல்லது. காலையில் எழுந்து குளித்து முழுகி வீட்டையும் சுத்தம் செய்து வையுங்கள். மஞ்சள் புடவையை கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின் மஞ்சள் தண்ணீரை தலையில் ஊற்றி, ஈர துணியுடன் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். சக்தி வாய்ந்த இந்த பரிகாரம் செய்ய 21 வகையான பூக்கள் தேவை. கடவுளுக்கு சூட்டக்கூடிய எவ்வகை பூக்களாக இருப்பினும் 21 வகைகளை தேர்ந்தெடுத்து முந்தைய நாளே தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பூஜையில் 21 பூக்களையும் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை ஜெபித்து ஒவ்வொரு பூக்களாக எடுத்து அம்மன் சிலைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். மந்திரம் எதுவும் தெரியாதவர்கள் ‘அம்மன் தாயே போற்றி’ என்னும் இந்த மந்திரத்தை ஒவ்வொரு முறையும் சொல்லலாம்.

21 பூக்களையும் கொண்டு மனதார அர்ச்சனை செய்த பின்பு தீப, தூப, ஆரத்தி எடுக்க வேண்டும். கற்பூர ஆரத்தி எடுத்து முடித்த பின்பு கண்களில் ஒற்றிக் கொண்டு மனதார இறைவனை பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். இது போல வளர்பிறை நாட்களில் வரும் வெள்ளிக்கிழமையில் ஒன்பது வாரங்கள் தொடர்ந்து செய்ய, கெட்ட கனவு வருவது முற்றிலும் தடுக்கப்படும். கணவனுக்கு வரக்கூடிய மிகப்பெரிய கண்டங்கள் கூட இதன் மூலம் ஒன்றுமில்லாமல் போய்விடும். வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுபவர்கள் கூட, தொழிலில் சிறந்து விளங்க ஆரம்பிப்பார்கள். நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய எளிய இந்த பரிகாரத்தை செய்து நாமும் பயனடையலாமே!

- Advertisement -