கருட புராணத்தில் சொல்லும் தண்டனைகள் என்ன?

446

இந்து மதத்தில் நம்பிக்கையின்

அடிப்படையில் மறுபிறவி என்பது

உண்டு என பலரும் நம்பி வருவதால்

தான் ஒழுக்கம், நேர்மை, சுயகட்டுப்பாடு

போன்றவைகளை கடைபிடித்து

வருகின்றனர். பிறப்பு, இறப்பு என்பது

நமது ஆன்மாவிற்கு கிடையாது. அது

நித்தியமானது. உடலுக்கு மட்டுமே பிறப்பு,

இறப்பு ஏற்படுகிறது. பூலோகத்தில் ஒரு

ஜீவன் பிறப்பெடுக்கும்போது, நாம் செய்யும்

பாவ, புண்ணிய கணக்கிற்கேற்றார்

போல நமது ஆன்மா மேலுலகிற்கு

சென்ற பின்னர் சொர்க்கம் அல்லது

நரகத்தை அடையும். புண்ணியம்

செய்திருந்தால் சொர்க்கமும், பாவம்

செய்திருந்தால் நரகமும் கிடைக்கும்.

இவ்வாறு மரணத்திற்கு பிறகு என்ன

வாழ்க்கை இருக்கிறது என்பது

குறித்தும், இறந்த உயிரின் நிலை

குறித்தும், அதற்கான சடங்குகள்

குறித்தும் என்னென்ன வகையான

தண்டனைகள் வழங்கப்படும் என்றும்

கருட புராணத்தில் மிகத்தெளிவாக

கூறப்பட்டுள்ளது. அதையடுத்து, அதில்

கூறப்பட்டுள்ள தண்டனை விபரங்களை

பார்க்கலாம்.சொர்க்கம், நரகம் :

• புண்ணியம் மற்றும் நல்லது செய்த

ஆன்மாக்களுக்கு தேவலோகத்தில்

அவர்கள் செய்த புண்ணியத்திற்கேற்ப

சொர்க்க லோகத்தில் வசித்து வர முடியும்.

• சொர்க்க லோகத்தில் இருக்கும்போது,

அவர்களுக்கு தேவலோகத்தில்

இருப்பவர்கள் பணிவிடை செய்து, நல்ல

சுகபோகமாக வசிக்கும்படி அனைத்து

வசதிகளையும் செய்து கொடுப்பார்கள்.

• பாவம் செய்தவர்களுக்கு அவர்கள்

செய்த பாவங்களின் தன்மைக்கேற்ப

நரக தண்டனை கிடைக்கும்.

• பூமியில் வசிக்கும்போது,

ஒவ்வொருவரும் செய்த கொடுமைகள்,

தீமைகள், மோசடிகள், நம்பிக்கை

துரோகங்கள், பாவங்களுக்கேற்ப

நரகத்தில் தண்டனைகளின் வகைகள்

இருக்கும்.

- Advertisement -• அநீத்தாமிஸ்ர நகரம், ரௌரவ நரகம்,

மகா ரௌரவ நரகம், கும்பிபாகம்,

தாமிஸிர நரகம், காலகுத்திரம், அவீசி

போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட

வகையான தண்டனைகள் உள்ளன.

தண்டனைகள்

• கணவன், மனைவி சேர்ந்து வாழாமல் இருவரும் ஒருவரையொருவர் ஏமாற்றி, கள்ளத்தொடர்பு கொண்டு, அடுத்தவர் மனைவி, கணவருடன் சேர்ந்து வாழ்வது போன்றவைகளுக்கு அவர்களது கண்கள்

பறிக்கப்பட்டு இருட்டில் விட்டு, முட்கள்

போன்று கூர்மையான முனை கொண்ட

இரும்புத்தடியால் நாளொன்றுக்கு

ஆயிரம் தடவை அடித்து

துன்புறுத்தப்படும்.


• மனைவியைத் துன்புறுத்தி கொடுமை

செய்பர்களின் ஆன்மாக்கள் தீக்கோலால் சுட்டுத் தண்டிக்கப்படும். பெண்கள், பெண்

குழந்தைகள் போன்றவர்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் சவுக்கு மரத்தில் கட்டி வைத்து, கீழே நெருப்பை எரியவிட்டு,

கிங்கரர்களால் ஓய்வின்றி மாறி, மாறி

கசையடியால் அடித்து துன்புறுத்தப்படும்.

• பிறரது குடும்பத்திற்கு கேடு செய்ய

நினைப்பது அல்லது பிற

குடும்பத்தினரின் பொருளை

அபகரிப்பது போன்ற செயல்களுக்கு

சூலாயுதத்தால் குத்தி துன்புறுத்தப்படும்.

• கொடூரமான முறையில் பிற குடும்பத்தை

பிரிப்பது மற்றும் கேடுகெட்ட

எண்ணத்தில் செயல்படுவதற்கு, கொடூர

மிருகங்களை கொண்டு தாக்கப்படும்.

• தனது வயிறு நிரம்புவதற்காக.

வாயில்லா உயிர்களை வதைத்தல்

மற்றும் கொடுமை செய்தல்

போன்றவைகளுக்கு எரியும் எண்ணெய்

கொப்பரையில் இட்டு தண்டிக்கப்படும்.

• பெரியோர் மற்றும் பெற்றோரை

அடித்தல், அவமதித்தல் மற்றும் பட்டினி

போடுதல் போன்றவைகளுக்கு, அவர்கள்

செய்த பாவமே, அவர்களுக்கும் அதே

தண்டனை கிடைத்திட காத்திருக்கும்.

• பொய் சாட்சி சொல்லி நிரபராதிகளுக்கு துன்பம் கொடுப்பவர்களுக்கு துர்நாற்றம் கொண்ட தண்ணீரில் அழுத்தப்பட்டு அழுக்கு தண்ணீரை குடிக்க வைக்கும்

தண்டனை கொடுக்கப்படும்.

• பொய் சொல்லி, பிறரது உடைமைகளைக்

கவரும் பாவிகளுக்கு எரியும் அக்னிகுண்டத்தில் தள்ளப்பட்டு வதைக்கப்படும் தண்டனை கொடுக்கப்படும். • அப்பாவிகளின் உடைமைகளைப்

பறித்துக்கொள்ளும் அநியாய

அக்கிரமகாரர்களை கொடிய மிருகங்கள் கடித்து கொதறும் தண்டனை வழங்கப்படும். •

பசுக்களை காரணமின்றி

வதைப்பவர்களின் ஆன்மாக்கள்

சவுக்கடியால் துன்புறுத்தப்படும்.

• எந்தத் தொந்தரவும் செய்யாத மிருகங்களை வதைக்கும் நபர்களின் ஆன்மாக்கள் கூரிய அம்புகளால்

குத்தப்பட்டு துன்பத்தை அனுபவிக்கும். பாவம், புண்ணியம் எதையும் கண்டுகொள்ளாமல் காசுக்காக எதையும் செய்பவர்கள் முள் தடிகளாலும், முள் செடிகளாலும் குத்தப்பட்டு

துன்புறுத்தப்படுவார்கள்.

- Advertisement -