கார்த்திகை தீபம் ஏற்றுவது எதற்கு?

428

கார்த்திகை தீபம் ஏற்றும்போது,

தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும்,

ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில்

பார்வதி தேவியும் எழுந்தருள்

புரிவதாக ஐதீகம். தீபம் ஏற்றி இறை

வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும்

தேவியரின் திருவருளையும் ஒருங்கே

பெறலாம். திருக்கார்த்திகை

தினத்தன்று, களி மண்ணாலான

விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு

திரியிட்டு விளக்கேற்றி வழிபாடு

செய்யும்போது, அது சிவமாகிய

ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி

சொரூபமாகிறது. திருவிளக்கின்

அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில்

மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய்

நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம்

செய்கின்றனர். திருவிளக்கு வழிபாடு

செய்யும் போது, விநாயகருக்குரிய

மந்திரங்கள் படித்து, பொட்டுவைத்து,

மாலை அணிவித்து. தூபதீபம்

காட்டினால் அதிக பலன் கிடைக்கும்.

அதையடுத்து, தீபத்தின் மகத்துவம்

மற்றும் அதன் தத்துவம் குறித்து

பார்க்கலாம்.

மகத்துவம்

தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் முருகப்பெருமானையே அருணகிரிநாதர் “தீபமங்களஜோதீ நமோநம” என்று

திருப்புகழில் பாடுகிறார். • நாயன்மார்களில் நமிநந்தியடிகள்,

இறையருள் கைகூடுவதற்காக

தண்ணீரால் விளக்கெரித்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, தன் இரத்தத்தையே எண்ணெயாய் ஊற்றி இறைவனுக்கு தீபமேற்றி வழிபட்டவர் கலியநாயனார். திருவிளக்கேற்றுவதற்கு பணம்

இல்லாததால், தனது தலைமுடியையே

விளக்குத் திரியாக்கி எரித்தவர்

கணம்புல்ல நாயனார்.

• என்ன, ஏது, என தெரியாமலே

கோயிலில் இறைவன் தீபத்தைத் தூண்டிவிட்ட காரணத்துக்காகவே, எலியானது மறு பிறவியில் மகாபலி சக்ரவர்த்தியாய் பிறந்த

கதை தீப வழிபாட்டின் மகத்துவத்தை தெரிவிக்கும்.

தத்துவம் கார்த்திகை தீபம் ஏற்றும்போது,

தீபத்தினால் ஏற்படும் வெளிச்சத்தையே

ஞானம் என்கிறார்கள். இது கேதுவுக்கு

நிகர் எனப்படுகிறது.

தீபத்தில் எரியும் ஜ்வாலை செவ்வாய் எனப்படுகிறது. ஜ்வாலையின் கீழே விழும் நிழல் ராகு

எனப்படுகிறது.

ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் குருவின் அம்சமாகும்.

ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன்

இருக்கும் கருமைப் படிந்த பகுதி சனி

பகவானுக்கு நிகரானது.

• ஆசையை குறைத்துக் கொண்டால்

நிம்மதி கிடைப்பது உறுதி என்பது

போல்,

திரி எரிய எரிய குறைந்துகொண்டே

வருவது சுக்கிரன் எனப்படுகிற

ஆசையை கொண்டால்

நிம்மதி கிடைக்கும் என்று அர்த்தம்! • ஆசைகள் தான் நம்மை அழிக்கிறது. மோட்சம் கிடைக்காமல் கர்மாவானது,

மீண்டும் மீண்டும் மனிதப்பிறவியாக

பிறப்பு எடுக்கச்செய்கிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை, ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவுகிறது.

பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன், ஜீவாத்மாகிய ஆத்மா இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே, தீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத்

தத்துவமாகும்.

- Advertisement -