கும்பம் – குருபெயர்ச்சி பலன்கள்

1026

பூரட்டாதி 1, 2.3-ஆம் பாதங்கள்.

ஆத்ம பலமும், மனோதிடமும் கொண்டு

எதையும் சாதித்துக் காட்டும் வல்லமை

பெற்ற கும்ப ராசி நேயர்களே! பொன்னவன் என போற்றப்படக் கூடிய குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 20-11-2027 முதல் 13-04-2022 வரை (வாக்கியப்படி 13-11 2021 முதல் 13-04-2077 வரை) ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதும் ஒரு

ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமும்,

உங்கள் ராசியாதிபதியுமான சனி தற்போது

உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரித்து

ஏழரைச்சனியில் விரயச் சனி நடப்பதும்

அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற

முடியாது. உங்களது உடல்

ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து

கொள்வது, உணவு விஷயத்தில்

கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.

பணவரவுகள் எதிர்பார்த்த அளவிற்கு

இருக்காது என்பதால் ஆடம்பர

செலவுகளை குறைப்பது நல்லது.

எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள்

ஏற்படும் காலம் என்பதால் எதிலும் முன்

எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு தனது

சிறப்பு பார்வையாக 5, 7, 9-ஆம் வீடுகளை

பார்வை செய்வதால பூர்விக

சொத்துக்களால் அனுகூலமும், கணவன்,

மனைவியிடையே ஒற்றுமையும் நிலவும்,

சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும்,

புத்திர வழியில் மகிழ்ச்சியும் நிலவும்.

தடைப்பட்ட திருமண சுப காரியங்களில்

கூட அனுகூலங்கள் உண்டாகும். உற்றார்

உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக

இருப்பதால் ஏற்படும் நெருக்கடிகளை

சமாளிக்கும் பலம் உண்டாகும்.

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு

சற்று மந்த நிலை நிலவினாலும்

கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் கிடைக்க

யலாபங்கள் கிடைக்கும்.

வேண்டிய

வேலையாட்கள்,

பாட்கள் ஒத்துழைப்பு அவ்வளவு

சிறப்பாக இருக்காது என்பதால்

உங்களுக்கு தேவையற்ற வேலைப்பளு

ஏற்பட்டு அலைச்சல் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பணியில்

நிம்மதியுடன் செயல்பட முடியும் என்றாலும்

பணி சுமை காரணமாக உடல் அசதி ஏற்படும் உழைப்பிற்கான சன்மானம் அடைய இடையூறுகள் ஏற்படும் என்பதால் மன நிம்மதி குறைவு ஏற்படும். புதிய

வேலை தேடுபவர்கள் கிடைக்கும்

வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது

நல்வது. கொடுக்கல், வாங்கலில் சற்று

சிந்தித்து செயல்படுவது நல்லது. சர்ப்ப

கிரகமான ராகு ஜென்ம ராசிக்கு 4-ல், கேது

10-ல் சஞ்சரிப்பதால் தேவையில்லாத

அலைச்சல், இருப்பதை அனுபவிக்க

இடையூறுகள் ஏற்படும் வீடு, வாகனங்கள்

பராமரிப்புக்காக செலவு செய்ய நேரிடும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு

பாதிப்புகள் ஏற்படும் வயிறு சம்பந்தப்பட்ட

பிரச்சனைகள் உண்டாகும். அதிக

அலைச்சலால் நேரத்திற்கு சாப்பிட

இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில்

உள்ளவர்கள் நலமாக இருப்பார்கள். புத்திர

வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள்

நடைபெறும். பெற்றோர் வழியில் இருந்த

மருத்துவச் செலவுகள் குறையும்,

குடும்பம் பொருளாதாரம்

குடும்பத்தில் சுப காரியங்களுக்கான

முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி

கிட்டும். கணவன், மனைவியிடையே

ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

புத்திரர்களால் நற்பலன்கள் உண்டாகும்.

உற்றார் உறவினர்களின் ஆதரவுகள்

சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஏற்ற

இறக்கமாக இருக்கும். பூர்வீக சொத்து

விஷயங்களில் இருந்த பிரச்சனைகள்

விலகி ஓரளவுக்கு நற்பலன்கள்

உண்டாகும். ஆடம்பரச் செலவைக்

குறைக்கவும்

கொடுக்கல் போங்கல்

பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை

இருக்கும். கொடுக்கல், வாங்கலில் மிகவும்

நிதானமாக இருப்பது நல்லது பெரிய

தொகைகளை ஈடுபடுத்துவது மூலம் வீண்

விரயங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்

என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன்

இருப்பது நல்லது. உங்களுக்குள்ள வம்பு

வழக்குகளில் இழுபறியான நிலை

இருக்கும். கொடுத்த கடன்கள் தடையின்றி

வசூலாகும்.

தொழில் வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்யவர்கள்

எதிர்பார்த்த வாபத்தினை அடைய அதிக

நேரம் உழைக்க வேண்டும். கூட்டாளிகள்

ஆதரவு சிறப்பாக இருப்பதால் ஏற்படும்

நெருக்கடிகளை சமானிக்க முடியும். பெரிய

தொகை கொண்ட முதலீடுகளை சிறிது

காலம் தள்ளிவைப்பது நல்லது அப்படி

செய்ய வேண்டிய நிலை இருந்தால்

அதனை உங்கள் பெயரில் செய்யாமல்

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில்

செய்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டுத்

மூலம் அனு கூலமான செய்தி கிடைக்கும்.

- Advertisement -

உத்தியோகம்

செய்யும் உத்தியோகத்தில் சற்று

வேலைப்பளு அதிகரிக்கும் பொறுப்புகள்

அதிகரிப்பதால் தேவையற்ற அலைச்சல்

மன அமைதி குறையும் நிலை ஏற்படும்.

எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள்

தாமதட்பட்டாலும் கௌரவமான பதவி

உயர்வுகள் கிடைக்கும். பலரை வழி நடத்தக்

கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்.

உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.

சக ஊழியர்களிடம் சற்று கவனமாக

செயல்படுவது நல்லது. பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள், மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும். கணவன்,

மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக

இருக்கும். திருமண வயதை

அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப்

பின் அனுகூலப் பலன் உண்டாகும்.

சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும்

அமையும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.

என்றாலும் செலவுகள் கட்டுக்குள்

இருக்கும். பூர்வீக சொத்துகளால் லாபம்

கிடைக்கும்,

அரசியல்

பெயர், புகழுக்கு எந்த விதத்திலும் பங்கம்

ஏற்படாது என்றாலும் மக்களுக்கும்.

கொடுத்த வாக்குறுதிகளைக்

காப்பாற்றுவது நல்லது. கட்சிப்

பணிகளுக்காக சில செலவுகளைச் செய்ய

வேண்டியிருக்கும். வெளியூர் சென்றுவரக்

கூடிய வாய்ப்பும் உண்டாகும். கெளரவம் உயரும். பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. விவசாயிகள் பயிர் விளைச்சல் சுமாராகத்தான்.

இருக்கும். விளைப்பொருளுக்கேற்ற

விலையை சந்தையில் பெற முடியாது. அரசு

வழியில் சிறு சிறு மானியத் தொகைகள்

கிடைக்கும். பங்காளிகளால் ஓரளவுக்கு ஆதரவு உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். மாணவ, மாணவியர் கல்வியில் சிறப்புடன் செயல்பட முடியும்.

முடிந்த வரை தேவையற்ற நட்புகளை

தவிர்த்து விடுவது நல்லது. பெற்றோர்,

ஆசிரியர்களின் ஆதரவுகள் முழுமையாகக் கிடைக்கும். உடல் ஆரொக்கியத்தில் உண்டாகக் கூடிய பாதிப்புகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு இடையூறுகள் ஏற்படும். பரிகாரம் கும்ப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு

குரு பசுவான் ஜென்ம ராசியில்

சஞ்சரிப்பதால் குரு பரீதியாக

தட்சிணாமூர்த்திக்கு

வியாழக்கிழமைகளில் விரதமிருந்து

கொண்டை கடலை மாலை சாற்றுவது,

மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி மஞ்சள் நிற

மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி

வழிபடுவது இல்லத்தில் குரு எந்திரம்

வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய

மாணவர்களுக்கு உதவி செய்வது.

ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன்,

போன்றவற்றை ஏழை எளிய

பிராமணர்களுக்கு தானம் செய்வது

உத்தமம்.

சனி பகவான் ஜென்ம ராசிக்கு 12-ல்

சஞ்சரித்து ஏழரைச் சனியில் விரய சனி

நடப்பதால் சனிக்கிழமை தோறும்

சனிபகவானை வழிபடுவது, ஊனமுற்ற

ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வது

சனிக்கிழமைகளில் திருப்பதி

வெங்கடாசலபதியை வழிபடுவது,

அனுமனையும் விநாயகரையும்.

வழிபடுவது போன்றவற்றால் சனியால்

ஏற்படக்கூடிய கெடுதிகள் குறையும்

சர்பகிரகங்கள் சாதகமின்றி சஞ்சரிப்பதால்

ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு

எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி

மலர்களால் அர்ச்சனை செய்வது, மந்தாரை

மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது

நல்லது. கேதுவுக்கு பரிகாரமாக தினமும்

விநாபகரை வழிபடுவது, செவ்வல்லி

பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது

சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது

உத்தமம்

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்- 5, 6,8,

கிழமை – வெள்ளி, சனி,

திசை -மேற்கு,

கல் – நீலக்கல்,

நிறம் – வெள்ளை, நீலம்,

தெய்வம்-ஐயப்பன்

- Advertisement -