குரு பெயர்ச்சி பலன்கள் – மிதுனம்

1741

மிருகசீரிஷம் 34-ஆம் பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம்
பாதங்கள்.

தீர்க்கமான சிந்தனை, சிறப்பான அறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7, 10-க்கு அதிபதியான

பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய குரு பகவான் திருக்கணிதப்படி 20-11-2020 முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கப்படி 15-11-2020 முதல் 13-11-2021 வரை) அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இது சாதமற்ற அமைப்பு என்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகள் உண்டாகும். சனியும் 8-ல் சஞ்சரித்து அஷ்டமச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர் கொள்ள நேரிடும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு பேச்சில்

நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது குறைத்துக் கொண்டு பேச்சில்

நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமான பலனை பெறுவீர்கள். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. 6-ல் கேது சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளிக்கும் யோகம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு அதன் மூலம் குடும்ப தேவைகள்

பூர்த்தியாகும் சூழ்நிலை ஏற்படும் கணவன், மனைவி இடையே ஒருவருக்கு ஒருவர் புரிந்து நடந்து கொண்டால் எதையும் எதிர் கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும்

அதிகரிப்பதால் இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்வது நல்லது கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற குறைவதோடு பொருட்தேக்கம் உண்டாகும்.
செயல்பாடுகளால் அபிவிருத்தி
உத்தியோகஸ்தர்களுக்கு

உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வேலை சுமையால் உடல்நிலை சோர்வடைந்து அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படுவதால் குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலைகள் ஏற்படும் குரு தனது சிறப்பு பார்வையாக 12, 2, 4 ஆம் வீடுகளை பார்ப்பதால் குடும்பத்தில் நல்லது நடக்கும் வாய்ப்பு, அசையும் அசையா சொத்து வழியில் சுப செலவுகள் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும்

சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் தாமதமான நிலையே நிலவும். சிறு தடைக்கு பின்பு நல்லது நடக்கும். அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு உள்ள பொருளாதார நெருக்கடிகள் எல்லம் விலகி சகல விதத்திலும் மேன்மையான பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும் வாய்ப்பு, கடன்களை குறைக்கும் சூழ்நிலை உண்டாகும். புத்திர வழியில் மகிழ்ச்சி பூர்வீக சொத்துகள் மூலம் ஆதாயம் ஏற்படும். உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் நிலை எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் யோகம் உண்டாகும்.


உடல் ஆரோக்கியம்:

உங்களின் ஆரோக்கிய பாதிப்பால் உடல் சோர்வு, மந்தநிலை ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாவதால் மன அமைதி குறையும். நம்பியவர்களே துரோகம் செய்வதால் உங்கள் பலமும் வலிமையும் குறையும். மனைவிக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல் டென்ஷன், வீண் செலவுகள் உண்டாகும் உங்களது ஆரோக்கியம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சற்று சிறப்பாக இருக்கும்

குடும்பம் பொருளாதார நிலை:

குடும்பத்தில் ஒற்றுமை ஒரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சாதகமாக இருப்பதால் ஏற்படும் மற்ற பிரச்சனைகளை தைரியத்துடன் எதிர் கொள்ள முடியும் உற்றார் உறவினர்களின் வருகையால் வீண் பிரச்சனைகளும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கும் பணவரவுகளில் தடைகள் நிலவுவதா < குடும்பக் தேவைகளைப் பர்த்தி செய்யவே பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே கடன் வாங்க நேரிடும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் ஏப்ரலுக்கு பின்பு நல்லது நடக்கும். புத்திர வழியில் மனசஞ்சலங்கள் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும் போது நிதானமாக செல்வது நல்லது

கொடுக்கல், வாங்கல்:

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட்

போன்றவற்றில் வீண் செலவுகள் ஏற்படும் எதிர்பார்க்கும் லாபங்கள் தடைப்படும் பணம் கொடுக்கல், வாங்கல்

விஷயங்களில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நீங்கள் செய்யும் எந்தவொரு காரியங்களிலும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது

தொழில், வியாபாரம்:

தொழில், வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற இடையூறுகளையும்,சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளில் எந்தவொரு காரியங்களில் ஈடுபடும் போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த கடனுதவிகள் தாமதப்படுவதால் அபிவிருத்தி குறையக்கூடும். தற்போது இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்து கொண்டால் ஏப்ரலுக்கு பிறகு பொருளாதார மேன்மைகள் ஏற்படும் தொழிலாளர்களும் அனுகூலமாக அமைய மாட்டார்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் அலைச்சலை எதிர்கொள்ள நேரிடும்

உத்தியோகம்:

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும் எவ்வளவு தான் பாடுபட்டாலும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை எடுக்க முடியாது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தாமதப்பட்டாலும் ஏப்ரலுக்கு பிறகு நல்லது நடக்கும். நிலுவைத் தொகைகள் கைக்கு கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியூரில் பணிபுரிய நேரிடும்.

பெண்கள்:

குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். பிறந்த வீட்டிலும், புகுந்த வீட்டிலும் நிம்மதியற்ற நிலை ஏற்படும். எடுக்கும் காரியங்களில் இடையூறு உண்டாகும் கணவன், மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர் கொள்ள முடியும். தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தாமதப்படும் உடல் நிலையில் மாதவிடாய் LL

கோளாறுகள், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தோன்றும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் ஏப்ரலுக்கு பிறகு சாதகமான பலன்கள் ஏற்படும்

அரசியல்:

அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்தால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெற முடியும் பேச்சில் சற்று நிதானத்தைக் பேச்சில் சற்று நிதானத்தைக்

கடைப்பிடிப்பது நல்லது. எதையும் முழுமையாக முடிக்க முடியாத சூழ்நிலை நிலவும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் அலைச்சல் தாமத நிலை ஏற்படும் என்றாலும் பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் மன நிம்மதி ஏற்படும் மறைமுக எதிர்ப்புகள் குறையும்

விவசாயிகள்:

பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். பட்ட

பாட்டிற்கான பலனைப் பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள்

தாமதமாக கிடைக்கும். சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்காது என்றாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள்

உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. பங்காளிடம் பேச்சை குறைக்கவும்

கலைஞர்கள்:

கலைஞர்கள் கையிலிருக்கும்

வாய்ப்புக்களை நழுவ விடாமல் பார்த்துக் கொண்டால் ஏப்ரலுக்கு பிறகு உயர்வான நிலையை அடைய முடியும். தொழிலில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும் வரவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைக்காமல் இழுபறி நிலையில் இருக்கும். பொருளாதார நிலையில் நெருக்கடி நிலவும். தேவையற்ற பயணங்களால் உடல் சோர்வு ஏற்படும் சேமிப்பு குறையும்

மாணவ, மாணவியர்:

மாணவர்கள் எவ்வளவு முயன்று படித்தாலும் அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாதபடி மனம் அலைபாயும் மதிப்பெண்கள் குறைவதால் பெற்றோர் ஆசிரியர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்க்கும் உதவிகள் கிடைப்பதில் தடைகள் உண்டாகும் தேவையற்ற நண்பர்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்

பரிகாரம்:

மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நெய், தேன் போன்றவற்றை ஏழை, எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது மஞ்சள் நிற ஆடைகள் அணிவது நல்லது

சனி 8-ல் சஞ்சரித்து அஷ்டமச் சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் விரதமிருந்து நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி கருங்குவளை மலர்களால் அர்ச்சனை

செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது மிகவும் நல்லது. சனிப்ரீதியாக அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை

மேற்கொள்ளலாம். ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5, 6, 8

நிறம் – பச்சை, வெள்ளை ,

கிழமை – புதன், வெள்ளி

கல் – மரகதம்

திசை – வடக்கு

தெய்வம் – விஷ்ணு

- Advertisement -
- Advertisement -