குரு பெயர்ச்சி பலன்கள் – மகரம்

703

உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள் திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்

நண்பர்களிடமும், விரோதிகளிடமும் சகஜமாகப் பழகக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3, 12 க்கு அதிபதியான ஆண்டு கோளான

குருபகவான் திருக்கணிதப்படி வரும் 20-11
முதல் 20-11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 15-11-2020 முதல் 13-11-2021 வரை) ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். இதன் மூலம் கடந்த காலங்களில் ஏற்பட்ட வீண் விரயங்கள் குறைந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும்

தேவையற்ற ஆடம்பர செலவுகளை சற்று குறைத்து கொள்வது நல்லது. சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் ஏழரைச்சனியில் உங்களுக்கு ஜென்மச்சனி நடப்பது சற்று நெருக்கடிகளையும், ஆரோக்கிய

குறைபாடுகளையும் ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அதிக கெடுதியை ஏற்படுத்த மாட்டார். உங்கள் ராசிக்கு 5-ல் ராகு சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்துவது மூலம்

ஏற்படும் சிறு, சிறு உடம்பு பாதிப்புகளில் இருந்து தப்பிக்க முடியும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்பு

பார்வையாக உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆம் பிள்ளைகளால் சாதகமான பலன்கள் பூர்வீக சொத்து மூலம் அனுகூலம் ஏற்படும் கணவன், மனைவி இடையே ஒற்றுமை

வீடுகளை பார்ப்பதால் திருமண சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு

சிறப்பாக இருப்பதாலும் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு

உறுதுணையாக இருப்பதாலும் எந்த பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் வலிமை உண்டாகும். எடுக்கும்

முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படும் என்றாலும் எதிலும் முன்னேச்சரிக்கையுடன் செயல்பட்டால் சிக்கலை சமாளிக்க முடியும் பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம்

உங்கள் ராசிக்கு கேது பகவான் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பதால் எந்த செயலிலும் எதிர் நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடையும் வாய்ப்பு கிடைக்கும். வீண் செலவுகளை குறைத்து கொண்டால் கடனில்லாத கன்னிய வாழ்க்கை அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று பொருட் தேக்கங்கள் ஏற்படும் என்றாலும் உங்களின் தனி திறனால் ஒரளவுக்கு அனுகூலங்களை அடைவீர்கள்

வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. அதிக முதலீடு கொண்ட செயல்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்க முடியும். வேலைப்பளு அதிகப்படியாக இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப் பின் கிடைக்கும். வெளியூர்

பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன் மூலம் அனுகூலமானப் பலன்களும் உண்டாகும்

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14-09-2021 வரை அதிசாரமாக தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்க இருப்பது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் இக்காலங்களில் உங்களுக்கு உள்ள சிக்கல்கள் எல்லாம் குறைந்து சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும் தாராள தன வரவால் கடன் பிரச்சனைகள் குறைந்து நிம்மதி அடைவீர்கள்

உடல் ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மனைவி பிள்ளைகளின் உடல் நிலை சற்று சாதகமாக இருக்கும். பணி சுமை காரணமாக உடல் சோர்வு, அதிக அலைச்சல் உண்டாகும். தேவையற்ற மன குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது ஆரோக்கியத்திற்கு நல்லது

குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடந்த கால கருத்து வேறுபாடுகள் விலகி குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். புத்திரர்களால் சுப செலவுகள் உண்டாகும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைப்பது உத்தமம் பொருளாதார ரீதியாக சற்று நெருக்கடிகள் இருந்தாலும் ஏப்ரலுக்கு பிறகு சற்று முன்னேற்றமான பலனை அடைவீர்கள்

கொடுக்கல், வாங்கல்:

கமிஷன், ஏஜென்சி காண்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல், வாங்கலில் மிகவும் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் பணவிஷயத்தில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதும், வாக்குறுதிகளைக் கொடுப்பதும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். வம்பு வழக்குகளில் கவனத்துடன் இருந்தால் பிரச்சனைகளை சாமாளிக்க முடியும்

தொழில், வியாபாரம்:


தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், போட்டிகளும் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலும் உண்டாகும். கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டால் அபிவிருத்தி குறையும் என்பதால் முடிந்தவரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் எந்தவொரு காரியங்களிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம் தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும்

உத்தியோகம்:

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை சரிவர செய்து முடிக்க முடியும் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் ஏப்ரலுக்கு பிறகு அனுகூலங்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் வீண் பிரச்சனைகள் உண்டாவதை தவிர்க்க முடியும்.சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும் அதிக நேரம் உழைக்க வேண்டியிருப்பதால் உடல்நிலை சோர்வடையும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டி இருக்கும்

பெண்கள்:

உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும் கணவன், மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டி வரும். எதிர்பார்க்கும் பணவரவுகளும் தாமதப்படுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தடைகள் நிலவும். புத்திர வழியில் நல்லது நடக்கும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்
அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்து மனநிம்மதி குறையும்.
அரசியல் பொதுப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். முடிந்தவரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவது நல்லது. எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெற முடியும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும்

விவசாயிகள்:

பயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும் நீர் வரத்து சற்று குறைவாக இருக்கும். கூலி ஆட்கள் மூலம் வீண் பிரச்சனைகள் ஏற்படும். புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனமாக ஈடுபடுவது நல்லது. உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது, வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளை பெரிது படுத்தாமல் இருப்பது நல்லது.
கலைஞர்கள் கிடைத்த வாய்ப்புக்களை நழுவ விடாமல்

பாதுகாத்து கொண்டால், ஏப்ரலுக்கு பிறகு முன்னேற்றமான பலனை அடைய முடியும் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டு மன அமைதி குறையும். உடன் இருப்பவர்களால் வீண் பிரச்சனைகளைச் சந்திப்பீர்கள். பணவரவுகளில் நெருக்கடி இருக்கும் என்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது

மாணவ, மாணவியர்:

கல்வியில் ஈடுபாடு குறையும். ஞாபகமறதி, மந்த நிலை உண்டாகும். கவனக் குறைவால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெற முடியாது தேவையற்ற நண்பர்களின் சகவாசமும்
பொழுது போக்குகளும் உங்களின் வாழ்க்கை நிலையை மாற்றி அமைக்கும் வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.


பரிகாரம்:

மகர ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால்

வியாழக்கிழமை தோறும் குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது

உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்மச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் பெருமாள் கோவில்களுக்கு செல்வது

நவகிரகங்களில் உள்ள சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது, கருப்பு துணியில் எள்ளை மூட்டை கட்டி, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றுவது நல்லது. கருப்புநிற ஆடை, கைக்குட்டை பயன்படுத்துவது நல்லது சனிப்ரீதியாக அனுமன் மற்றும் விநாயகர் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் ஸ்நானம் செய்யலாம்.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 5, 6, 8

நிறம் – நீலம், பச்சை ,

கிழமை – சனி, புதன்

கல் – நீலக்கல்,

திசை – மேற்கு

தெய்வம் – விநாயகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here