குரு பெயர்ச்சி பலன்கள் – மீனம்

721

பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி
ரேவதி.

எப்பொழுதும் கலகலப்பாகப் பேசி மற்றவர்களைக் கவரக்கூடிய ஆற்றல்
கொண்ட மீன ராசி நேயர்களே
பொன்னவன் எனப் போற்றப்படக்கூடிய உங்கள் ராசியாதிபதி குரு பகவான்

திருக்கணிதப்படி வரும் 20-11-2020 முதல் 20 11-2021 வரை (வாக்கிய பஞ்சாங்கப்படி 15-11 2020 முதல் 13-11-2021 வரை) உங்கள்
ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். 11-ல் சஞ்சரிக்கும் குரு – சனி சேர்க்கை பெற்று சஞ்சரிக்க இருப்பதும், முயற்சி ஸ்தானமான 3-ல் சர்ப்ப கிரகமான ராகு சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாம் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாள் கனவுகள் நனவாகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். கடந்த கால கடன்கள் விலகி சேமிக்க முடியும்.குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும் மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். சிலருக்கு சிறப்பான குழந்தைப் பாக்கியம் கிட்டும் வீடு, மனை வாங்கும் வாய்ப்பு ஏற்படும் கொடுக்கல், வாங்கல் லாபகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தையும் அனுகூலத்தையும் அடைய முடியும். கூட்டாளிகளையும்

தொழிலாளர்களையும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயங்களைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும்

உயரதிகாரிகளின் கெடுபிடிகள் குறைந்து பணியில் நிம்மதியுடன் பணி புரிய முடியும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று உங்கள் திறமைகள் வெளிப்படும். சமுதாயத்தில் பெயர், பு: யாவும் உயர்வடையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி

மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள் கேது 9-ல் சஞ்சரிப்பதால் ஆன்மீக ஈடுபாடு மற்றும் ஸ்தல தரிசனம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு வரும் 06-04-2021 முதல் 14 09-2021 வரை அதிசாரமாக விரய ஸ்தானமான 12-ல் சஞ்சரிக்க உள்ள காலத்தில் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனமாக செயல்படுவது நல்லது. எது எப்படி இருந்தாலும் 11-ல் சனி சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் லாபகரமான பலனை அடைய முடியும்

உடல் ஆரோக்கியம்:

உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள். கடந்த காலங்களில் இருந்து வந்த மருத்துவ செலவுகள் குறையும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக ஈ ஈடுபட்டு வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவீர்.
குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய தூரப்பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலமான

நிகழ்ச்சிகள் நடைபெற்று மேலும் மனநிம்மதி ஏற்படும். தொலை
பலன்களும் உண்டாகும் குடும்பம் பொருளாதார நிலை

உங்களின் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும் கணவன், மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார்

உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக கைகூடி மன நிம்மதியை ஏற்படுத்தும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் அனைத்தும் குறைந்து சேமிப்பு பெருகும் வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்க

முயற்சித்தால் நற்பலன் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகளால் சாதகமான பலன்கள் உண்டாகும்

கொடுக்கல், வாங்கல்:

கமிஷன் ஏஜென்சி மற்றும் காண்டிராக்ட் துறைகளில் உள்ளவர்களுக்கு நல்ல லாபமும் பெரிய மனிதர்களின் ஆதரவும்
சிறப்பாக அமையும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக நடைபெறும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி அனைவரிடமும் நல்ல பெயரை சம்பாதிக்க முடியும். வழக்குகள் பைசலாகும்

தொழில், வியாபாரம்:

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்குக் கடந்த காலங்களில் இருந்து வந்த மந்த நிலை விலகி நல்ல மேன்மை உண்டாகும் நல்ல லாபத்தை அடைந்து கடன்களை பைசல் செய்ய முடியும். தொழிலை விரிவுபடுத்த அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கும் கூட்டாளிகளின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களில் எதிர்பார்த்த அனுகூலப்பலன்கள் கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலம் நல்ல செய்தி வரும்.


உத்தியோகம்:

தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு சம்பள பாக்கிகள் யாவும்

உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்கப் பெற்று மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தக்க சமயத்தில் அமைந்து அதிகாரிகளின்

பாராட்டுதல்களைப் பெறுவீர்கள். மேலும் உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பு உங்களின் உயர்வுகளுக்கு சாதகமாக அமையும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வீர்கள் வேலைப்பளு குறையும்

பெண்கள்:

உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும் உங்களுக்கு இருந்த உடம்பு பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்புபாக உறவினர்களிடம் இருந்த கருத்து செயல்படுவீர்கள். கணவர் வழி வேறுப்பாடுகள் குறையும்

நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீன பொருட் சேர்க்கைகள் உண்டாகும். சிலருக்கு வீடு மனை வாங்கும் கனவுகளும் நனவாகும் உத்தியோகம் செய்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றங்கள் கிடைக்கும்.

அரசியல்:

உங்களின் பெயர் புகழ் யாவும் உயரக்கூடிய காலமாகும். எதிர்பார்த்த கௌரவ பதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் தொண்டர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். மறைமுக வருவாய்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக உங்கள் மீது உள்ள அவபெயர் விலகி மன நிம்மதி ஏற்படும்

விவசாயிகள்:

நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி நீர்வாத்து தாராளமாக இருக்கும்.

நீர்வரத்து தாராளமாக இருக்கும்
குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும் அரசு வழியில் மானிய உதவிகள் கிட்டும் பங்காளிகள் உங்களுக்கு ஆதரவாக

இருப்பார்கள். வம்பு, வழக்குகளில் நல்ல தீர்வு கிடைக்கும்

கலைஞர்கள்:

நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த பட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளி உலகத்திற்குத் தெரியப்படுத்துவீர்கள். கலை சம்பந்தப்பட்ட துறைகளிலும் நல்ல உயர்வுகளைப் பெற முடியும். ரசிகர்களின் பேராதரவைப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த பணபாக்கிகளும் திருப்திகரமாக கைக்கு வந்து சேரும்

மாணவ, மாணவியர்:

கல்வியில் மேன்மையான நிலைகள் உண்டாகும். கல்விக்காக எடுக்கும் எந்தவொரு முயற்சியிலும் வெற்றி கிட்டும் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் சாதகமான பலனை அடைவீர்கள். கல்வி மட்டுமின்றி விளையாட்டுப் போட்டி, கவிதை, கட்டுரை போன்றவற்றில் பரிசுகளைத் தட்டிச் செல்வீர்கள். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும்

பரிகாரம்:

மீன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு ராசியாதிபதி என்பதால் வியாழக்கிழமை

தோறும் குரு, தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலையை மாலையாக கோர்த்து அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது

உங்கள் ராசிக்கு 9-ல் கேது சஞ்சரிப்பதால் வியாழக்கிழமைகளில் விரதமிருந்து விநாயகரை வழிபடுவது, சதுர்த்தி விரதங்கள் இருப்பது, செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம்
தருவது நல்லது

அதிர்ஷ்டம் அளிப்பவை:

எண் – 1, 2, 3, 9

கிழமை – வியாழன், ஞாயிறு

திசை – வடகிழக்கு

கல் – புஷ்ப ராகம்,

நிறம் – மஞ்சள், சிவப்பு

தெய்வம் – தட்சிணாமூர்த்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here