கொலு பொம்மைகள் வைப்பது எதற்காக?

591

புரட்டாசியில் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் போது,

கொலு பொம்மைகளை

வைத்து கொண்டாடுவதில் பல

தத்துவங்கள் அடங்கியுள்ளது.

இந்த உலகத்தில் எல்லா

உயிர்களிலும் ஆதிசக்தியானவள்

நிறைந்திருக்கிறாள். அவளின்றி

ஓர் அணுவும் அசையாது என்பதை

உணர்த்துவதே கொலுவின் தத்துவம்.

அதனால்தான் கொலுவில் ஓரறிவு

உயிர்கள் முதல் அனைத்திற்கும்

ஆதாரமாக விளங்கும் அம்பிகை

வரையிலான பொம்மைகள் நவராத்திரி

கொலுவில் இடம்பெறுகின்றன.அதனடிப்படையில் உயிரினங்களின்

பரிணாம வளர்ச்சியை விளக்கும்

விதத்திலும், முடிவில் நாம் தெய்வ நிலையை அடைய வேண்டும் என்றும், அத்தகைய நிலையை அடையும்

வகையில் அறநெறியோடு அதாவது

தர்ம நெறியோடு வாழ வேண்டும் என்ற

விதத்திலும் கொலு பொம்மைகளை

வரிசைப்படுத்தி வைக்கின்றோம்.

இந்நிலையில், கொலுவில் களிமண்

பொம்மை எதற்காக, இத்தகைய

கொலு பொம்மைகள் நமக்கு எதை

உணர்த்துகின்ற என்பதை அறிந்து கொள்ளலாம். கொலுவில் களிமண் பொம்மை

எதற்காக

சுரதா என்ற மன்னன் எதிரிகளை அழிக்க, தன் குருவிடம் ஆலோசனை கேட்ட போது, குரு களி மண்ணால் காளியை செய்து, உண்ணாவிரதம்

இருந்து வழிபாடு செய்து வந்தால்

உன்னுடைய எண்ணம் நிறைவேறும்

என்று கூறியருளினார்.

- Advertisement -அதனடிப்படையில் சுரதா மன்னன்

ஆற்றுக் களி மண்ணைக் கொண்டு.

காளியை செய்து, அதை பிரதிஸ்டை

செய்து, உண்ணாவிரதம் மேற்கொண்டு.

காளி தேவியை வேண்டினான். அந்த

வேண்டுதலின் பயனாக பகைவர்களை

அழித்து, ஒரு புது யுகத்தையே படத்தான்

சுரதா மன்னன்.

‘ஐம்பூதங்களில் ஒன்றான

மண்ணால் ஆன பொம்மையால்

என்னை பூஜித்தால், நான்

பூஜிப்போருக்கு சகல சுகங்களையும்,

சவுபாக்கியங்களையும் அளிப்பேன்’

என்று, தேவி புராணத்தில் அம்பிகை

கூறியுள்ளார்.அதன்படி, சுரதா மன்னன் செயல்பட்டு

பகைவர்களை வீழ்த்தி, இன்னல்களில்

இருந்து விடுதலை பெற்றான். எனவே,

நவராத்திரியில் அம்பிகைக்கு பிடித்த

பொம்மைகளைக் கொண்டு கொலு

வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரி

வழிபாட்டின் முக்கிய அங்கமாக

இடம்பெற்றுள்ளது. கொலு பொம்மைகள் உணர்த்தும்

உண்மைகள்

ஐம்பூதங்களில் ஒன்றான மண்

பொம்மைகளை வரிசைப்படுத்தி

வணங்கினால் தான் மகத்துவங்கள்

அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

சிலர் பிளாஸ்டிக் பொம்மைகளையும் சேர்த்து கொலு வைப்பது தவறான ஒன்றாகும்.


நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களில் ஒன்றான நிலத்திலிருந்து எடுக்கும் மண் மூலம்

நாம் செய்யும் பொம்மைகள் மகத்துவம்

வாய்ந்தவை.

• செட்டிநாட்டுப் பகுதிகளில் ‘மரப்பாச்சி’

பொம்மைகளைக் கொண்டு கடவுள்

வழிபாட்டில் இருந்து, தாய் தந்தையரைப்

பேணி வைத்துக் கொள்வது வரை

விளையாட்டில் வலியுறுத்துவர்.

• வாழ்வியல் நெறிகள், ஒழுக்க

நெறிகள், கலாச்சாரம் சார்ந்த

கோட்பாடுகள், பண்பாட்டுக் கூறுகள்

ஆகிய அனைத்தையும் வலியுறுத்தும்

காட்சிகளைக் கொண்ட பொம்மைகளை

பயன்படுத்தினர்.விக்கிரமாதித்தன் காலத்தில்

சிம்மாசனம் ஏறுவதற்கு முன் முப்பத்தி

இரண்டு பொம்மைகளை வைத்து

ஆட்சிமுறை பற்றி கதை சொன்னதாக

வரலாறுகள் கூறுகின்றன.

.தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப்

பார்த்திருப்பீர்கள். எப்படி வைத்தாலும்

அது பழைய நிலைக்கு வந்து

விடும். எல்லோரிடமும் வளைந்து

கொடுத்துச் செல்ல வேண்டும்.

ஆனால் நம்முடைய சுயத்தை இழக்கக்

கூடாது என்ற பாடத்தை நமக்குக்

கற்றுக் கொடுக்கின்றது தலையாட்டிப்

பொம்மை.

- Advertisement -