கோவிலில் பிறர் ஏற்றிய விளக்கில் நாம் ஏற்றலாமா?

194

எல்லாம் வல்ல இறைவனை கோயிலில் சென்று வழிபடும்போது, மனப்பாரம்
குறைந்து மனம் அமைதி அடைவதை

பலரும் உணர்ந்திருக்கலாம். சந்தோசமோ.

துயரமோ அதை மனிதர்களிடம் கூறி

ஆறுதல் படுவதை விட, கோயிலுக்கு

சென்று இறைவனிடம் தெரிவிக்கும்போது

சந்தோசமாக இருந்தால் மேலும் மகிழ்ச்சி கிடைக்கும். துயரமாக இருந்தால், அதற்கான தீர்வு கிடைக்கும். இந்நிலையில், இறைவனிடம் வேண்டி

வழிபடும்போது விளக்கேற்றி வழிபட

மிகுந்த நன்மை கிடைக்கும்.

அவ்வாறு

விளக்கேற்றும்போது, மற்றவர் ஏற்றிய

விளக்கின் மூலமாக நமது விளக்கை ஏற்றலாமா? என்பது குறித்து பார்க்கலாம். விளக்கேற்றுவது எதற்காக

கோயில்களில் வழிபடும் வழிபாடு

முறைகளில் ஒன்று தான் தீப வழிபாட்டு

முறை.

தீபம் ஏற்றி வழிபடும்போது

நமது கோரிக்கை அனைத்தும் நிறைவேறும். விளக்கேற்றுவதன் மூலமாக

பிரகாசமான ஒளிமயமான வாழ்க்கை

கிடைக்கும். தீய சக்திகள் மற்றும் எதிர்மறை

சிந்தனைகள் விலகி நேர்மறை சக்தி,

நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

தீபத்தின் ஒளியை கண்டு மனதில்

தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

- Advertisement -


கோயிலில் விளக்கேற்றுவதால் காற்றில்

இருக்கும் மாசுகள் குறைந்து சுற்றுப்புற சுகாதாரம் ஏற்படுகிறது. மற்றவர் விளக்கில் ஏற்றலாமா

* கோயிலில் விளக்கேற்றி வழிபட

எண்ணெய், நெய் ஆகியவற்றை

கொண்டு செல்லும் போது தீப்பெட்டியும்

எடுத்து செல்வது அவசியம். ஏனெனில்,

பிறர் ஏற்றிய விளக்கிலிருந்து நமது

விளக்குக்கு தீபம் ஏற்றுவதால் எந்த பலனும் இல்லை. கணவன், மனைவியோ அல்லது

பெற்றோர். குழந்தைகளோ

செல்லும்போது, அதில் ஒருவர்

ஏற்றிய விளக்கில் இருந்து மற்றவர்

விளக்கேற்றுவது தவறு கிடையாது.


* அதே நேரத்தில் பிறர் ஏற்றிய தீபத்தில்

இருந்து நாம் தீபம் ஏற்றினால், நமக்கு

கிடைக்க வேண்டிய பலன் பிறருக்கு

சென்று விடாது. மேலும், தோஷம் எதுவும் ஏற்படாது. பரிகாரம் இல்லாத சாதாரண வழிபாடு,

பூஜைக்கு செல்லும் போது, கோயிலில்

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட

அகல் விளக்கை நீரில் கழுவி

விளக்கேற்றினால் தோஷமில்லை.

. பரிகாரம் செய்வதாக இருந்தால்

கண்டிப்பாக புதிய அகல் விளக்கில்

மட்டுமே விளக்கேற்ற வேண்டும்.

எத்தனை விளக்கு ஏற்றுவது

பொதுவாக கோயிலில் விளக்கேற்றும்

போது ஒற்றைப்படை வரிசை

எண்ணில் ஏற்றுவது சிறந்த பலனை

கொடுக்கும்.


1, 3, 5, 7, 9, 11 என்ற எண்ணிக்கையில்

அவரவருக்கு வருகின்ற ஜென்ம

நட்சத்திர தினத்தன்று கோயிலுக்கு

சென்று வழிபட்டு விளக்கேற்றுவது

மிகுந்த நன்மையை உடனடியாக

கொடுக்கும்.


எந்த திசையில்

கிழக்குத் திசை : துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி ஏற்படும்.

வடக்குத் திசை திருமணத் தடை, கல்வித் தடை நீங்கும். மேலும் செல்வச் செழிப்பும், ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

மேற்குத்திசை : கடன் தொல்லை.

சனியின் தாக்கம் விலகும்.

தெற்கு திசை : எக்காரணம் கொண்டும்

இந்த திசையை நோக்கி தீபம்

ஏற்றக்கூடாது.

எந்த திரி


தாமரை நார் திரி : தாமரை மலர்களின்

தண்டை நிழலில் உலர்த்தி, காய வைத்து

விளக்கில் திரியாக போட்டு ஏற்றி வர

வாழ்வின் செல்வ நிலை உயரும்.

வாழைநார் திரி : வாழை மர பட்டை

நாரை நிழலில் உலர்த்தி, காய

வைத்து தீபத்தில் திரியாக போட்டு

விளக்கேற்றினால் நாம் செய்த பாவங்கள்

நீங்கும். மேலும் மறைந்த முன்னோர்களின்

சாபங்களும் நீங்கும்.


பருத்தி திரி : பருத்தி திரியை போட்டு

விளக்கேற்றி வந்தால் நம்மை பிடித்த

தரித்திரம் நீங்கி அதிர்ஷ்டத்தை

கொடுக்கும்.


சிகப்பு நிற பருத்தி துணி : சிகப்பு

நிற பருத்தி துணியால் செய்த திரியை

கொண்டு விளக்கேற்றுவதால், திருமண

தடை மற்றும் புத்திர பேறில்லாமை

நீங்கும்.

பன்னீர் திரி :

வெள்ளை துணியை பன்னீரில் ஊறவைத்து, பின்பு அதை உலர்த்தி அந்த துணியை சிறிய திரிகளாக மாற்றி வெள்ளிக்கிழமைகளில் தீபமேற்றி

வந்தால் லட்சுமி தேவியின் அருட்பார்வை

கிடைக்கும்.


மஞ்சள் நிற துணி திரி : திருமண

வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள் ஒரு புது மஞ்சள் நிற துணியை எடுத்து, அதிலிருந்து சிறிது வெட்டி திரியாக

போட்டு தீபமேற்ற இல்லற வாழ்வின்

பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -