கோவில் செல்லும் முன் எப்படி செல்ல வேண்டும்:

652

கோவிலுக்கு செல்லும் முன் பக்தர்கள் கோவிலுக்கு அருகாமையில் ஏதேனும் தண்ணீர் குழாய்கள் கண்டிப்பாக இருக்கும். கை, கால்களை சுத்தமாக கழுவிய பிறகு தான் கோவில் உள்ளே செல்ல வேண்டும். குறிப்பாக கை, கால்களை கழுவிய பிறகு ஒரு சொட்டு நீரை தலையில் தெளித்து கொள்ளவேண்டும்.

அடுத்து கோவிலுக்குள் செல்லும் முன்பு அங்குள்ள கோவில் கோபுரத்தையும், கலசத்தையும் வணங்கி விட்ட பிறகுதான் கோவில் உள்ளே செல்ல வேண்டும். அடுத்து கோவிலில் இருக்கும் துவாரபாலகரின் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.

கோவிலுக்கு செல்லும் முன் அனைவரும் கோவில் படிக்கட்டை குனிந்து வலது கை விரல்களால் படிக்கட்டை தொட்டு புருவத்தின் இடையில் தொட்டு அழுத்த வேண்டும். இப்படி செய்வதால் நாம் கோவிலுக்குள் சென்றதும் நமது பாதத்தின் வழியே கோவில் நேர்மறை ஆற்றல்கள் நமது உடலில் செயல்பட தூண்டும்.

  • கோவில் வாசல்படிக்கட்டை எப்படி கடக்க வேண்டும்:

கோவிலில் குறுக்கே இருக்கும் வாசற்படியை நாம் தாண்டித்தான் செல்ல வேண்டும். கோவில் படியை தாண்டி செல்வதால் நமது மனதில் இருக்கும் கவலைகள், கெட்ட விஷயங்கள், எதிர்மறை எண்ணம் அனைத்தையும் வெளியில் விட்டு செல்வதாக ஐதீகம் கூறுகிறது.

  • வாசற்படியை மிதித்து சென்றால் என்ன அர்த்தம்:

கோவில் படிக்கட்டை தாண்டாமல் மிதித்து சென்றால் மனதில் உள்ள பிரச்சனைகளை கூடவே கோவிலுக்குள் அழைத்து செல்வதாக ஐதீகம் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here