சந்திராஸ்டமம் என்றால் என்ன?

672

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம

ராசியிலிருந்து எட்டாவது இடத்தில்

- Advertisement -

சந்திரன் இரண்டே கால் நாட்கள் நிலை

பெறும் காலம் தான் சந்திராஷ்டமம்

என்று அழைக்கப்படுகிறது.

சந்திராஷ்டமம் என்பது சந்திரனின்

எட்டாம் இடத்தை குறிக்கிறது.

சந்திரனை மனோகரன், போக்குவரத்து

காரகன் என்று பல பெயர்களில்

குறிப்பிடுகின்றனர். அதில் மனோகரன்

ராசியிலிருந்து எட்டாம் இடத்தில் மறைந்து

கொள்ளும் பொழுது கெடுபலன்களை

தருவதுடன் குணத்தில் மாற்றங்களை

உண்டாகும்.

சந்திராஷ்டம காலத்தில்

நன்றாக இருந்தவர்கள் கூட வில்லனாக

மாறி விடுவதை பார்க்கலாம்.

எதற்கெடுத்தாலும் கோபம், ஆத்திரம் என்று

காணப்படுவார்கள். முக்கிய விஷயங்களை

மறந்து விடுவார்கள். எந்த பொருளை, எங்கு வைத்தோம் என்று ஞாபகம்

இருக்காது. அதிக நினைவாற்றல்

கொண்டிருந்தாலும் கூட சந்திராஷ்டம

காலத்தில் மறதி ஏற்படும்.

சந்திராஷ்டமம் என்பது எது

• சந்திரன் ஒவ்வொரு மாதமும் நாம் பிறந்த

ராசிக்கு எட்டாமிடத்தை (அஷ்டம

ஸ்தானத்தை) அது கடந்து செல்லும்

நேரத்தில், சில தடைகள், மனச்சோர்வு, இடையூறுகள்,

போன்றவற்றை அளித்தே தீரும். இதுவே

சந்திராஷ்டமம் எனப்படும்.

சந்திரன் நாம் பிறந்த ராசிக்கு 8-ம் இடத்தில் இருக்கும் இரண்டே கால் நாட்கள் தான் சந்திராஷ்டமம் எனப்படும்.

• உதாரணத்திற்கு, நீங்கள் தனுசு

ராசிக்காரர்கள் என்றால் உங்களது

ராசியிலிருந்து எட்டாம் இடமான கடக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யும்

காலத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு

சந்திராஷ்டமம் என்று கூறப்படுகிறது.

அதேபோல் நட்சத்திரத்தை

எடுத்துக்கொண்டால் உங்களின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து சரியாக 17-வது

நட்சத்திரத்தில் உள்ள காலம்

சந்திராஷ்டமம் ஆகும்.

இந்த காலத்தில் ஜாதக காரருக்கு சிறு

தோஷம் ஏற்படும். சில கெடுபலன்கள்

நிகழும்.

என்ன செய்ய வேண்டும்.

• சந்திராஷ்டம காலத்தில் முதல் 24 மணி

நேரத்தில் எந்த நல்ல காரியங்களையும் செய்யாமல் இருப்பது நல்லது. அதற்குப்

பிறகு செய்து கொள்ளலாம்.

• 24 மணி நேரத்திற்குள் செய்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம்

இருப்பவர்கள் விநாயகப் பெருமானுக்கு

பால் அல்லது தயிர் அபிஷேகம் செய்து

அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டபின்

செய்யலாம்.

அதே போல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு

வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு

செய்வதால் சூரிய பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் ஓரளவு குறையும்.

• சந்திராஷ்டம தினத்தன்று, செய்யும்

காரியங்களில் நிதானமாகவும், மிகுந்த

கவனமாகவும் செயல்படுவதால் காரியம்

தடைபடாது.

அன்றைய தினத்தில், சிறிது நேரம்

தியானம் மேற்கொண்டால் படபடப்பு

போன்றவை வராது. இறை வழிபாடு

மிகவும் நல்லது.

• வண்டி வாகனங்களில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் நலம்.

சந்திரனின் முக்கியத்துவம்

• சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை

வைத்துத் தான் நாம் பிறந்த நாள்

கொண்டாடுகிறோம். • சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை

வைத்துத் தான் திருமணப் பொருத்தம், முதல் தசை போன்றவற்றை அறிகிறோம்.

• சந்திரன் இருக்கும் ராசிப்படிதான்

கோச்சாரப்பலனை அறிகிறோம்.

• சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை

வைத்துத் தான் கோயிலில் பிறந்த நாள் போன்ற நாட்களில் அர்ச்சனை, வழிபாடு

செய்யவேண்டும்.

- Advertisement -