சுக்கிரன் 7ம் இடத்தில் இருந்தால் தோஷமா?

2802

ஜோதிட குறிப்புகள்

பொதுவாக ஜாதகத்தில் 7-ம் இடம் என்பது

ஒருவருக்கு அமைய இருக்கும் திருமண வாழ்க்கையை பற்றியும், அவருக்கு கிடைக்க இருக்கும் வாழ்க்கை துணையை பற்றியும் கூறும் இடம் ஆகும் தம்பதிகளுக்குள் இருக்கும் பாசம், பந்தம் கொண்டு தான் தீர்மானிக்கப்படுகிறது

அன்பு, அனுசரனை என அனைத்துமே ஒருவர் ஜாதகத்தில் உள்ள 7-ம் இடத்தைக்

7-ம் இடம்

ஒருவர் வாழ்க்கையில் இல்லறம் இனிமையாகவும், அமைதியாகவும் இருக்க

7-ம் இடம் பலம் பெற்று இருப்பது அவசியம் இப்படியாக 7-ம் இடம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு திருமணம் இனிக்க களத்திரகாரகனான சுக்கிரன் பலம் பெற்று இருப்பது முக்கியம் ஜோதிடத்தின் அடிப்படையில் ஒரு ஆணின் ஜாதகத்தில் களத்திரகாரகனான சுக்கிரன் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் இருத்தல் கூடாது. அப்படி இருந்தால் அந்த அமைப்பு அந்த ஆணிற்கு தோஷத்தை தரும். இதனால் திருமண வாழ்க்கையில் அந்த ஆணுக்கு ஏதேனும் ஒரு குறை இருக்கும். இங்கு குறை என்பது தாய், தந்தை இல்லாத ஒரு பெண்ணை ஜாதகர் மணக்க நேரிடலாம்

உடல் உபாதை உள்ள பெண்ணை அந்த ஜாதகர் மணக்கலாம்

இப்படியாக ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் உள்ள சுக்கிரன் ஏதேனும் ஒரு விதத்தில் ஒரு குறையை அந்த ஜாதகருக்கு தருவார்

வலுப்பெற்றால்

ஒருவேளை 7-ம் இடத்தில் சுக்கிரன் இருந்து அவர் குரு, புதன் வளர்பிறை சந்திரன் போன்ற சுப கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ இல்லை லக்கினத்திற்கு 7-க்கு உடைய கிரகம் வலுப்பெற்று இருந்தாலோ மேற்சொன்ன தோஷத்தின் வேகம் குறையும் அல்லது மேற்சொன்ன தோஷத்தில் இருந்து விடுபட தோஷ பரிகாரம் உண்டு. அதுவே ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7-ம் இடத்தில் சுக்கிரன் இருப்பது யோக அமைப்பை தான் தரும். ஜோதிடத்தின் அடிப்படையில் ஆணின் ஜாதகத்தை ஒரு மாதிரியும் பெண்ணின் ஜாதகத்தை ஒரு மாதிரியும் அணுகுதல் வேண்டும். இதன்படி பெண்களுக்கு 7-ம் இடத்தில் சுக்கிரன் இருப்பது லட்சுமி கடாட்சத்தை தரும்.

பரிகாரம்

ஒரு ஆணின் ஜாதகத்தில் 7-ம் இடத்தில் சுக்கிரன் சுப கிரக பார்வைகள் இன்றி

தனித்து இருந்தாலோ அல்லது ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெறாமல் இருந்தாலோ என்ன பரிகாரம் செய்யலாம் வெள்ளிக் கிழமைகளில்

சிவபெருமானுக்கு வெள்ளை மலர் கொண்டு அர்ச்சனை செய்வது நல்லது

திருவரங்கம் சென்று அரங்கநாதர் சுவாமியை வணங்கி வருதல் நலம்

- Advertisement -