நாக தோஷம் என்றால் என்ன?

815

ஜோதிடத்தில் பல தோஷங்கள்

குறிப்பிடப்படுவதில் முக்கியமானதாக நாக தோஷம் பார்க்கப்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் நாக தோஷம் இருந்தால், சரியான காலத்தில் திருமணம்

நடைபெறாது, திருமணம்

நடந்திருந்தால் குழந்தைப்பேறு

இல்லாமல் அவதியடைவார்கள்.

அதையடுத்து, இந்த நாக

தோஷத்திற்கான பரிகாரத்தை 18

சித்தர்களில் ஒருவரும், பழநியில்

நவபாஷாணத்தால் ஆன முருகன்

சிலையை செய்தவருமான போகர்

சித்தர் தனது “போகர் 1200” நூலில் விரிவாக எளிதாக விளக்கியுள்ளார். இந்த பரிகாரம் செய்வதால் அந்த தோஷம் உள்ளவர் மட்டுமல்லாமல், அவரது சந்ததியினர்களுக்கே நாக

தோஷம் ஏற்படாமல் காத்துக் கொள்ளும்.


நாக தோஷம்

• ஜோதிடப்படி நாக தோஷம் என்பது

திருமண ஸ்தானமான 7-ஆம் வீட்டில்

ராகு இருப்பதால் ஏற்படுகிறது.

1,2,5,7,11 ஆகிய இடங்களில் ராகு

அல்லது கேது அமைந்திருப்பதால்

திருமணம் அல்லது குழந்தை பேறு

ஏற்படுவதில் தாமதம் சிக்கல் ஏற்படும்.

2,8-ஆம் இடங்களில் ராகு, கேது பார்வை ஏற்பட்டிருந்தாலும் இந்த

தோஷம் ஏற்படக் கூடும்.

நாக தோஷத்திற்கான பரிகாரத்தை

நாக சதுர்த்தி நாளில் செய்வது

சிறப்பாகும்.

- Advertisement -



• ஆடி அல்லது ஆவணி மாதத்தில்

வருகின்ற வளர்பிறை கருட

பஞ்சமிக்கு முந்தைய தினமான

சதுர்த்தியை நாக சதுர்த்தி

என்கின்றனர்.

• நாக சதுர்த்தி நாளில் விரதமிருந்து

நாகர் சிலைகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வதை நாகசதுர்த்தி

விரதம் என்கின்றனர்.

போகர் அறிவுரை

நாக சிலை செய்யும் முறை குறித்து

போகர் தனது நூலில் கூறுவதாவது..

• நாக சதுர்த்தி அன்று அரசமரத்திற்கு

அடியில், ஒரு நாக சிலை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

நாகர் சிலையானது நாக எந்திர பீடத்தில் மீது இருப்பது போன்றும், நாகங்கள் மேல் சிவலிங்கம் இருப்பது

போல கருங்கல் சிலையை பிரதிஷ்டை

செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

நாகர் சிலை இரண்டரை அடிக்கும் குறைவான உயரம் (பீடத்தை சேர்த்து)

கொண்டிருக்க வேண்டும்.

• பாம்புகள் இரண்டு அல்லது ஐந்து சுற்றுக்கள் பிண்ணிக் கொண்டிருக்க

வேண்டும்.

பிரதிஷ்டை செய்யும் தினத்தில் முழு விரதம் இருக்க வேண்டும். பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு பய பக்தியுடன் விரதமிருந்து

செய்ய வேண்டும்.


இவ்வாறு செய்வதால் நாக தோஷம் நிரந்தரமாக விட்டு செல்வதுடன் நல்வாழ்வு வாழமுடியும் என்று போகர் கூறுகிறார்.

- Advertisement -