பத்தும் பறந்து போகும்

532

பத்தும் பறந்து போகும் பத்தும் பறந்து போகும்….எப்போது? எனக் கேட்டால், “பசி வந்தால்’ என பதில் வரும். “நமசிவாய’ என்று சொன்னாலும் கூட பத்தும் பறந்து விடும். திருப்புகழில் அருணகிரியார் “”ஆவியீர் ஐந்தை அபரத்தே வைத்தோதில் ஆவி ஈரைந்தை அகற்றலாம்” என்கிறார். “”உலகமக்களே! ஐந்தெழுத்து மந்திரமான “சிவாயநம’ என்பதை மனதில் ஓதினால் “ஆவி பத்தும்’ பறந்து விடும். அதென்ன “ஆவி பத்து! “ஆ’ என்ற எழுத்துடன் பத்தைச் சேர்த்தால் “ஆபத்து’. “வி’யுடன் சேர்த்தால் “விபத்து’. ஆபத்து உடலுக்கு வரும் கஷ்டத்தையும், விபத்து உயிருக்கு வரும் துயரையும் குறிக்கும். உடலுக்கு பசி, நோய் முதலிய துன்பங்களும், உயிருக்கு பிறப்பு, இறப்பு என்னும் துன்பங்களும் வருகிறது. இதனால் தான் “சிவாயநம’ என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை’ என்கிறார்கள் ஆன்மிக அறிஞர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here