வாரம் ஒரு முறையாவது கோவிலுக்கு செல்லுங்கள்!…

89

பரந்த உலகில் இறைவனைத் தவிர, வேறு ஒருவராலும் ஒரு

செயலையும் செய்ய முடியாது. அவனைத் தவிர, நம்மை ஒருவராலும் ஒரு செயலும் செய்ய வைக்க

இயலாது. அவனை அறிந்தவன்

எல்லாம், அறிந்தவனாகிறான். அவனை

அறியாதவன் எல்லாம், அறிந்தும் எதையுமே அறியாதவன் போலாகிறான்.

ஒரு வகையில் நாம் அனைவருமே

இறைவனுக்கு கடன்பட்டவர்கள்.

அந்தக்கடனை செலுத்துவதற்கு இறை

வழிப்பாட்டை கண்டிப்பாக நாம் செய்தே

ஆக வேண்டும். இறைவனின் மீது,

பக்தி கொள்ளவேண்டும் என்பதை

ஞானிகள், சித்தர்கள், மகான்கள்,

நாயன்மார்கள், ஆழ்வார்கள்

ஆகியோர் வலியுறுத்துகின்றனர்.

அதையடுத்து, இறைவனின்

முக்கியத்துவம், கோயிலில் சென்று

வழிபடும் முறை, எதற்காக கோயிலில்

யாரையும் வணங்க கூடாது என்று

பார்க்கலாம். இறை

நாம் செய்த கர்மவினைகளுக்கேற்ப

நமது வாழ்வில் துன்பங்களும்,

துயரங்களும் தொடரும்.

தீவிர இறைவழிபாடு, அந்த கர்மாக்களின் தாக்கத்தை பெருமளவில்

மறைத்து, துன்பங்களை தாங்கும்

ஆற்றலை நமக்கு கொடுக்கும்.

துன்பங்களை தவிர்ப்பதற்காக தன்னால்

ஏதாவது செய்து தப்பிக்க முடியாதா

என்று மனிதன் செய்கின்ற முயற்சிகள்

அனைத்தும் தோற்றுப் போகும்போது,

இறைவனின் திருவடி தவிர வேறு இடமே

இல்லை என்று அமைதி அடைகிறான்.

•இதைத்தான் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு

முன்பே அனுபவித்து

தெரிவித்துள்ளனர்.

இறைவழிபாடு

தினமும் காலை எழுந்தவுடன், குளித்து

திருநீற்றை அணிந்து பூஜைக்கு ஏற்ற பூவை வைத்து வழிபட வேண்டும். தேவாரம் பாடி, வழிபடுவது மேலும்

சிறந்தது.

நம்பினோர் கெடுவதில்லை என்பது

நான்கு மறைகளின் முடிவு. நாள் தவறாது குறித்த நேரத்தில்

வழிபடும்போது, தியானிக்கும் போது, தெய்வத்தின் அருள் நம்மீது விழும்.

மனோபலம் அதிகரித்து, நாம் விரும்பியதை சாதிக்கும் வலிமை

கிடைக்கிறது.

கோயிலில்

இறைவழிபாட்டை தினமும் கோயிலுக்கு

சென்று வழிபடுவது மிகவும் நல்லது.

அவ்வாறு தினமும் கோயிலுக்கு செல்ல

முடியாதவர்கள் வாரத்திற்கு ஒரு

முறையாவது கோயிலுக்கு சென்று

வழிபட வேண்டும்.

வாரம் ஒருமுறையும் செல்ல முடியாதவர்கள் திருவிழா, நோன்பு போன்ற சிறப்பு பூஜை நேரங்களிலாவது

கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும்.

கோயிலில் இறைவன் தான் மிக

பெரியவர், மரியாதைக்குரியவர், மகத்துவம் வாய்ந்தவர். அதனால், கோயிலுக்குள்

இறைவனை தவிர வேறு யாரையும், அவர்கள் எத்தகைய உயர்பதவி

வகிப்பவராக இருந்தாலும் அவர்களை

வணங்ககூடாது.

அதேபோல், மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும், அவரையும்

வணங்ககூடாது.

ஏனெனில், இறைவன் முன் இருப்பவன், இல்லாதவன், உயர்பதவியில் இருப்பவன்,வேலையே இல்லாதவன்

என அனைவருமே சமமானவர்கள் தான். இறைவன் ஒருவரே நம்மை வழிநடத்தி செல்பவர். நடப்பது, நடக்க போவது அனைத்தும் அறிந்தவர். எனவே, இறைவனை மட்டுமே

சரணடைந்தால், நம் வாழ்வு என்றும்

சிறக்கும்.

- Advertisement -