மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை
ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி ஆகும். இத்திருநாளை உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் ஆவார். ஏகாதசி என்ற சொல்லிற்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து (கண், காது, மூக்கு, வாய், மெய்), கர்மேந்திரியங்கள் ஐந்து (வாக்கு பாதம், பாணி, பாயு, உபத்தம்). மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம் உடலாலும், உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் இருக்க வேண்டும். அதையடுத்து, நாளை ம் தேதி அதிகாலை வேளையில் உலகம் முழுவதுமுள்ள பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு விழா கோலாகலமாக நடைபெறும்
வைகுண்ட ஏகாதசி திருமாலை வழிபடும் விரத
முறைகளில் ஏகாதசி மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை, ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்பது இவ்விரதம் பற்றிய பழமொழியாகும். இவ்விழாவில் சொர்க்கவாசல் திறப்பு என்பது முக்கிய நிகழ்ச்சியாகும். வைகுண்ட ஏகாதசி அன்று துளசி நீரினை மட்டும் உட்கொண்டு பகல் மற்றும் இரவு விழித்திருந்து திருமால் பற்றிய பாடல்கள் பாடி விரதமுறை மேற்கொள்ளப்படுகிறது இவ்விரத வழிபாடு வைகுண்ட பதவி என்னும் மோட்சத்தை தரும் என்று கருதப்படுகிறது.
பரமபத வாசல்
மனிதராய் பிறந்த நாம், யாருக்கும் தீமை நினைக்காமல் எல்லா உயிர்களுக்கும் நன்மையே நினைத்தால் நம்மை அந்த பரந்தாமனே வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார் என்பதன் தத்துவத்தை உணர்த்தவே வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது
இருபது நாட்கள்
வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள்
கோயில்களில் இருபது நாட்கள்
திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது.
பகல் பத்து என பத்து நாட்களும்
இராப்பத்து என பத்து நாட்களும்
திருவிழா நடைபெறுகிறது. வைகுண்ட
ஏகாதசிக்கு முந்தைய பத்து நாட்களை
பகல் பத்து என்றும், வைகுண்ட
ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை
இராப்பத்து நாட்களாகவும் சிறப்பாக
கொண்டாடுகின்றனர்
பலன்கள்
ஏகாதசி விரதம் இருப்பவர்கள்
முதல்நாளான தசமி அன்று ஒரு பொழுது
உணவு உண்ண வேண்டும், ஏகாதசி
நாளில் உண்ணாமலும், உறங்காமலும்
விரதம் இருக்க வேண்டும். மறுநாளான
துவாதசியன்று, சூரியோதயத்திற்குள்
நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும்,
காலையிலேயே சாப்பாட்டை முடித்து
விட்டு பகல் முழுவதும் உறங்காமல்
நாராயண நாமத்தை நினைக்க
வேண்டும். இவ்வாறு வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர் என்பது ஐதீகம்
ஸ்ரீரெங்கத்தில்
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிற ஸ்ரீரெங்கத்தில்
நாளை 25-ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. மேலும்
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு இன்று 24-ம் தேதி மாலை 6 மணி முதல் நாளை 25-ம் தேதி காலை 8 மணி
வரை பக்தர்கள் யாருக்கும் அனுமதி
இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், வைகுண்ட ஏகாதசி
விழாவின் 21 நாள் நிகழ்ச்சிகளும்
Srirangamtemple Youtube சேனலிலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது.
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணாய