அமாவாசை தினம் நல்லதா கேட்டதா?

635

அமாவாசை தினத்தில் சூரியனும்,

சந்திரனும் நேர்கோட்டில்

ஒன்றையொன்று சந்தித்துக் கொள்கிறது.

அன்று முன்னோர்கள் எழு

லோகத்திலிருந்து பூமிக்கு

வருகிறார்கள். தங்களது

தலைமுறைகளை சூட்சமமான முறையில்

கண்காணிக்கிறார்கள் அவர்களது

வாரிசுகளான நாம் துவங்கும்

காரியங்களை கவனித்து.

ஆசிர்வதிக்கிறார்கள். எனவே பிதுர்

தேவதைகளை வழிபட்டு அவர்களுக்கு

மரியாதை செய்து அமாவாசை தினத்தில்

புதிய காரியங்களை துவங்கினால்

நிச்சயம் நல்லதே நடக்கும். அன்று

நற்காரியங்களை செய்வதனால் தீங்கு

ஏற்படாது. அதையடுத்து, அமாவாசை

தினத்தன்று முன்னோர்களை எவ்வாறு

வழிபாடு செய்வது. அமாவாசை தினம் நல்ல நாளா, கெட்ட நாளா என்றும், அமாவாசை குறித்து விஞ்ஞானம் கூறுவது பற்றியும் பார்க்கலாம்.

வழிபாடு

• அமாவாசை தினத்தில்

அதிகாலையிலேயே எழுந்து குளித்த பின்பு வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் விலக உப்பு கலந்த நீரால் வீடு

முழுவதையும் கழுவி தூய்மைப்படுத்த

வேண்டும்.

• வீட்டிலுள்ள பூஜையறையில் காலையிலும், மாலையிலும் விநாயகர் படத்திற்கு முன்பு தீபம் ஏற்ற

வேண்டும்.

• அமாவாசையன்று அனைத்து

தேவதைகளும், நம்முடைய

முன்னோர்களும் பூலோகத்திற்கு வந்து

காசி,ராமேஸ்வரம், கயா போன்ற

புண்ணிய தலங்களிலும்,

கடலோரங்களிலும் தர்ப்பண

பூஜையை ஏற்றுக் கொள்கின்றனர்.

• அமாவாசை அன்று பித்ருக்களுக்கு

தர்ப்பணம் கொடுப்பதால், அவர்களின்

அருளாசியால் என்ணற்ற நன்மைகள்

கிடைக்கும்.

• காகத்திற்கு சாதம் வைப்பதால்

எமலோகத்தில் வாழும் நம் முன்னோர்

அமைதி பெற்று நம்மை

வாழ்த்துவார்கள் என்பது ஐதீகம்.

• முன்னோர் வழிபாடுகளைச் செய்யச்

செய்ய, நாமும், நம் குடும்பமும், நம்

வாரிசுகளும் சீரும், சிறப்புமாக வாழலாம்.

• கஷ்டங்களில் இருந்து விடுபடலாம். கடன்

தொல்லையில் இருந்து மீளலாம்.

நல்ல நாளா

• தமிழகத்தின் வடக்கு பகுதியில் நிறை

அமாவாசை தினத்தில் பல்வேறு நல்ல

காரியங்களை செய்கின்றனர். • அதேபோல், வட இந்தியாவை சேர்ந்த

பெரும்பாலான சாஸ்திரிகள்,

அறிஞர்கள் அமாவாசை தினத்தன்று

புதிய காரியங்களை செயல்படுத்துவதில்

ஆர்வமுடன் உள்ளனர்.

கெட்ட நாளா

• தமிழகத்தின் தென் பகுதியில்

அமாவாசை தினத்தை நல்ல நாளாக

பலரும் கருதுவதில்லை. ஏனெனில், அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் சுப காரியங்களை

செய்யக்கூடாது என்று கணக்கிட்டுள்ளனர்.

• அமாவாசை தினத்தில் புதிய

செயல்களில் ஈடுபடுவது, பொருள்கள்

வாங்குவது, விற்பதை தவிர்த்திட

வேண்டும் என்று தென்னிந்திய

பகுதியை சேர்ந்தவர்கள் சிலர்

கூறுகிறார்கள்.

- Advertisement -


• அமாவாசை தினத்திற்கு, இரண்டு நாட்கள் முன்னால் அல்லது பின்னால்

முக்கிய வேலைகளில் ஈடுபடலாம் என்று

தெரிவிக்கின்றனர்.

• அமாவாசை தினத்தில் ஆன்மிக

பூஜை அல்லது பக்தி செயல்களில்

ஈடுபடுதல் நல்லது என்று

கூறுகிறார்கள்.

• அமாவாசை தீய சக்திகளுக்கு உகந்த

நாளாக இருப்பதால் இந்த நாட்களில்

எதிர்வினை சக்திகளின் ஆதிக்கம்

அதிகரித்து இருக்கும். எனவே,

இந்நாட்களில் எந்த காரியங்களிலும்

ஈடுபட வேண்டாம் என்று கூறுபவர்களும்

உண்டு. விஞ்ஞான விளக்கம்

• அமாவாசையன்று உலகை இயக்கும்

சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்வதால்

ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.

• அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில்

அதீதமாக வேலை செய்யும் என்று விஞ்ஞான ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது.

• அமாவாசையன்று விபத்துகள்

கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனர். • இத்தகைய செயல்களால், அமாவாசை

தினத்தன்று அதிக சக்தி இருக்கிறது

என்று நிருபிக்கப்பட்டுள்ளதால், அன்று

தொடங்கும் காரியம் எதுவாக

இருந்தாலும் நன்றாகவே இருக்கும்

என்று கூறப்படுகிறது.

என்ன செய்வது?

• அமாவாசை தினம் நல்லது என்றும், கெட்டது என்றும் பல்வேறு கருத்துகள் இருப்பதால், அவரவர் மன நிலைக்கேற்ப முடிவெடுத்து செயல்படுவதே சிறந்தது.

இந்த கட்டுரை உங்களுக்கு

பிடித்திருந்தால் உங்கள்

உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்

பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர்

செய்யுங்கள்).

- Advertisement -