கார்த்திகை சோமவார விரதம், வழிபாடு மற்றும் அதன் பலன்கள்

666

கார்த்திகை மாதத்தில்

கடைபிடிக்கப்படுகிற பல முக்கிய

-விரதங்களுள் கார்த்திகை சோமவாரமும்

ஒன்றாகும். ‘சோமன்’ என்றால்

உமையுடன் கூடிய சிவன் என்று

பொருள். இதற்கு சந்திரன் என்ற

பொருளும் உண்டு. கிழமைகளில்

சோமவாரம் என்பது திங்கட்கிழனமயை

குறிக்கும்.

சிவபெருமானுக்குரிய எட்டு

விரதங்களில், கார்த்திகை மாதத்தின்

திங்கட் கிழமைகளில்

கடைபிடிக்கப்படுகிற கார்த்திகை சோம

வார விரதமும் ஒன்று என ஸ்கந்த

புராணம் கூறுகின்றது. கார்த்திகை மாத

முதல் சோம வாரத்தில் இருந்து சோம வார

விரதத்தை தொடங்க வேண்டும். இந்த

விரதத்தை ஒருவர் தன் வாழ்நாள்

முழுவதும் கடைபிடித்தால் சிவனடியை

பெறுவதுடன், அளவில்லா

செல்வவளத்தையும் பெறலாம்.

அதையடுத்து, கார்த்திகை சோமவார

விரதம், வழிபாடு மற்றும் அதன் பலன்கள்

குறித்து பார்க்கலாம்.

சிறப்பு

• கார்த்திகை மாதம் அக்னியின் மாதமாகும். நெருப்புக்கோளாகிய (அக்னி கிரகம்) செவ்வாயின் ராசியான விருச்சிகத்தில், மற்றொரு நெருப்புக் கோளான சூரியன் சஞ்சரிக்கும் காலமே. கார்த்திகை மாதம் எனப் பழமையான நூல்களில் கூறப்பட்டுள்ளது. • கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்சத்திரம் மற்றும் பௌர்ணமி

இணைந்த திருக்கார்த்திகை நாளில்

அடிமுடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக

எம்பெருமாள் நின்றதால் அவரை ஜோதி

வடிவாகவே வணங்குகின்றோம். அந்த

கார்த்திகை மாத திங்கட் கிழமைகளில்

சோம வார விரதம் இருப்பது வெகு

சிறப்பாகும்.

- Advertisement -



• திங்கள் கிழமையான இந்நாளில்,

சோமனாகிய சந்திரன் தன் பெயரால்

இந்த விரதம் புகழ்பெற வேண்டும்

என சிவபெருமானிடம் வேண்டினான்.

• அதையடுத்து, சிவபெருமான் வரம்

கொடுத்ததால், இந்த விரதம்

சோமவார விரதமாகச் சிறப்பு

பெற்றது.

• கார்த்திகை மாதம் அனைத்து சிவன்

கோயில், முருகன் கோயில்

போன்றவைகளில் சிறப்பு பூஜை

வழிபாடு நடத்தப்படும்.

• கார்த்திகை விரதத்தை தவறாமல்

பன்னிரண்டு வருடம் கடைபிடித்து தான்

நாரத முனிவர் சப்த ரிஷிகளுக்கும்

மேலான பதவியைப் பெற்றார்.

• கார்த்திகை சோமவாரம்

அனுஷ்டிப்பவர்கள் இறைவனின்

அருளினால் சகல மேன்மைகளையும்

பெறுவர்.



விரதம்

• இந்த விரதத்தை அனுஷ்டிப்பவர்

அன்றைய தினம் முழுவதும் உபவாசம்

இருப்பது நல்லது.

• அவ்வாறு இருக்க முடியாதவர்கள்

இரவில் பால், பழம் மட்டும் உண்ணலாம்.

அதுவும் செய்ய இயலாதவர்கள்

மதியத்திற்கு பின்பு உணவருந்தலாம்

அல்லது இரவில் சாப்பிடலாம்.

ஆனால் ஒரு வேளையேனும்

உணவருந்தாமல் இருப்பது நன்மை

பயக்கும்.



• இவ்வாறு விரதத்தை மேற்கொண்டு

வந்தால், ஒருவர் தன் வாழ்வில் செய்த

பாவங்கள் அகலும், நோய் நொடிகள்

அண்டாது. இந்த விரதத்தை முறையாக,

தூய மனத்துடன் கடைபிடிப்பவர்கள்,

எல்லா செல்வங்களையும் அடைந்து,

அனுபவித்து இறுதியாக கைலாயப்

பதவியும் அடைவர்.

வழிபாடு

• அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து

கணபதியை வழிபட்டு, மஞ்சளில்

பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு

தேங்காய் உடைத்து கற்பூர தீபம்

காட்டவேண்டும்.



• பின்னர், கும்பம் தயார் செய்து, கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள் பொடி போன்றவற்றைப் போட்டு, கவசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும்.

• கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள்

தடவி, தேங்காய் வைத்து சந்தனம்.

குங்குமம் வைத்து அலங்காரம் செய்த

பூஜையைத் தொடங்க வேண்டும்.

• சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய்,

வாழைப்பழம் போன்றவற்றை

நைவேத்தியமாகப் படைக்கலாம்.

• வழிபாட்டின்போது சில நாமத்தை

உச்சரிப்பது சிறப்பான வாழ்வை

அருளும். இறுதியில், இறைவனுக்கு

தீபாராதனை காட்ட வேண்டும்.

சங்கு அபிஷேகம்

• சங்கு வெண்மை நிறம் வெண்மை நிறம்

சத்வ குணத்தைக் குறிக்கும்.

• உலகிற்கே ஆதாரமான “ஓம்” என்ற ப்ரணவ எழுத்தின் ஒலி சங்கில் உள்ளது. ஓதப்படும் மந்திரங்கள் மற்றும்

வேதங்கள் அனைத்தையும் சங்கு

கிரகித்துக்கொள்வதாக கூறப்படுகிறது.



• இப்படி மிகவும் சிறப்பு வாய்ந்த சங்கால்

அபிஷேகம் செய்வது மேலும் சிறப்பு.

இதனால் பல சிவாலயங்களில்

கார்த்திகை மாதம் வரும்

திங்கட்கிழமைகளில் 108 அல்லது 1008

சங்குகளில் நீர் நிரப்பி மந்திரங்கள் கூறி

சிவபெருமானுக்கு அபிஷேகம்,

ஆராதனைகள் செய்வது வழக்கம்.

• எனவே திங்கள்கிழமை அருகில்

இருக்கும் சிவத்தலங்களில், சிவன்

மற்றும் அன்னையை வணங்கி,

இறைவனின் அருளைப் பெறலாம்.

• கார்த்திகை சோமவார தினங்களில்

சங்கு பூஜை, அபிஷேகம்

போன்றவைகளை தரிசிப்பதுடன்,

சிலபெருமானுக்கு வில்வம் மற்றும்

பூக்களை சாற்றி வணங்குவதன் மூலம்

தம்பதிக்குள் ஒற்றுமை சிறக்கும்.

• கார்த்திகை சோமாவார நாட்களில்

சிவத்தலங்களைத் தரிசிப்பது கோடி

புண்ணியத்தைப் பெற்றுத் தரும்

பலன்கள்

• கணவன், மனைவி உறவில்

நல்லிணக்கம் ஏற்படும். பிரிந்த

தம்பதியினர் ஒன்று சேருவர்.

• திருமணம் கை கூடும். நல்ல வாழ்க்கைத்

துணை அமையும்.



• குழந்தை பாக்கியம் கிடைக்கும். வம்சம்

தழைக்கும்

• கல்வி, செல்லவளங்கள் கிட்டும்.

நம்பிக்கை பிறக்கும்.

- Advertisement -